உலக அளவில் குடியுரிமை தரப்படுத்தல்களில் சுவிட்சர்லாந்து முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.
அண்மையில் வெளியிடப்பட்டுள்ள உலக குடியுரிமை அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
உலகின் ஏனைய நாடுகளின் பிரஜைகளுக்கு குடியுரிமை வழங்குவதில் எவ்வாறான நலன்களை நாடுகள் வழங்குகின்றன என்பதன் அடிப்படையில் இந்த தரப்படுத்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கூவிட் பெருந்தொற்று நிலைமையின் பின்னர் எவ்வாறான நலன்கள் வழங்கப்படுகின்றன என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த சந்தர்ப்பங்கள் மற்றும் கூடுதல் பாதுகாப்பின் அடிப்படையிலேயே மக்கள் ஓர் நாட்டிலிருந்து மற்றுமொரு நாட்டுக்கு குடிப்பெயர்ந்து வாழ்வதற்கு விரும்புகின்றனர்.
வாழ்க்கைத் தரம், நிதிச் சுதந்திரம், பாதுகாப்பு, வர்த்தக சூழ்நிலைகள் உள்ளிட்ட சில முக்கிய காரணிகளின் அடிப்படையில் இந்த குடியுரிமை குறித்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தர வரிசையில் 88.1 புள்ளிகளைப் பெற்று சுவிட்சர்லாந்து முதல் இடத்தையும், 88 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டு டென்மார்க் இரண்டாம் இடத்தையும், 86.9 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டு பின்லாந்து மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.