உலகின் அதிகம் செலவு பிடிக்கும் 10 நகரங்கள் பட்டியல் ஒன்று வெளியாகியுள்ள நிலையில், பட்டியலில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரம் முதலிடம் பிடித்துள்ளது.
பல்வேறு அமைப்புகள் அவ்வப்போது உலகின் அதிகம் செலவு பிடிக்கும் நகரங்களின் பட்டியலை வெளியிட்டுவருகின்றன.
அவ்வகையில், ஆறு மாதங்களுக்கொருமுறை உலகின் அதிகம் செலவு பிடிக்கும் நகரங்களின் பட்டியலை வெளியிடும் Numbeo என்னும் இணையதளம், சமீபத்தில் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.
நகரங்கள்
உலகின் அதிகம் செலவு பிடிக்கும் 10 நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நகரம், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரம் ஆகும்.
பட்டியலில் இரண்டாவது இடமும் சுவிஸ் நகரம் ஒன்றிற்குத்தான் கிடைத்துள்ளது. அதன்படி பட்டியலில் இரண்டாவது இடத்தை சூரிச் நகரம் பிடித்துள்ளது.