இஸ்ரேலுக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ள சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்து தனது விமான சேவையை இஸ்ரேலின் தெல் அவீவிற்கான விமான சேவை மீள ஆரம்பிக்கப்பட உள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் வன்முறைகள் அதிகரித்ததை தொடர்ந்து மே மாதத்தில் தெல் அவிவிற்கான விமான சேவை Swiss International Air Lines (SWISS) நிறுவனம் இடைநிறுத்தியது.
எதிர்வரும் ஜூன் 23 முதல் அந்த சேவையை மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது. ஜெர்மனியை தலைமையிடமாக கொண்ட லுஃப்தான்சா குழுமத்தின் துணை நிறுவனமான Swiss International Air Lines, இஸ்ரேலின் முக்கிய நகரமான தெல் அவிவ் மற்றும் லெபனானின் தலைநகரான பீரூத்திற்கும் விமான சேவைகளை மீளத் தொடங்கும் திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலுக்கான விமான சேவையை
பெய்ரூட்டக்கு ஜூன் 10 முதல் செப்டெம்பர் மாதம் நடுப்பகுதி வரை, வாரத்திற்கு இரு விமானங்கள் இயக்கப்படும். இரு சேவைகளிலும் விமான ஊழியர்களுக்கான இரவு தங்குதல் ஏற்பாடுகள் இல்லாமல், ஒரே நாளில் பயணம் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த இரு மத்திய கிழக்கு நகரங்களுக்கும் மீண்டும் சேவை வழங்கும் தீர்மானம், விரிவான பாதுகாப்பு ஆய்வுகளின் பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து எடுக்கப்பட்டது” என தெரிவிக்கப்படுகின்றது.