கன்டோன் துர்காவ் பெர்லிங்கனில், ஞாயிற்றுக்கிழமை இடியுடன் கூடிய மழைக்குப் பிறகு இரண்டு நீரோடைகள் பெருக்கெடுத்து, கிராமத்தின் சில பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்து, பிரதான சாலை வெள்ளத்தால் மூழ்கியிருந்தது.
வெள்ளத்தில் மூழ்கிய பல பாதாள அறைகளை தீயணைப்புப் படையினர் வெளியேற்றினர். ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் கான்ஸ்டன்ஸ் ஏரியில் அதிக வெள்ள அபாயம் ஏற்பட்டது, இதனால் பெர்லிங்கனில் சாலைகள் மூடப்பட்டன.
(c) Keystone -Gian Ehrenzeller
கான்ஸ்டன்ஸ் ஏரி உயர் ஆபத்து மட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. ஏரிக்கரை பகுதிகள், கார் நிறுத்துமிடங்கள் மற்றும் தோட்ட உணவகங்கள் நிலைமை மிகவும் சிக்கலாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.