ஆர்காவ் இல் பல்வேறு திருட்டு சம்பவங்கள் : ஒருவர் அதிரடி கைது
ஜனவரி 31, 2025 வெள்ளிக்கிழமை இரவு, ஆர்காவ் கன்டோனில் வின்டிஸ்ச்சில் குடியிருப்பு கட்டிடங்களில் தொடர்ச்சியான உடைப்புகளும், உடைப்பு முயற்சிகளும் இடம்பெற்றுள்ளதாக ஆர்காவ் கன்டோனல் போலீசார் தெரிவித்துள்ளனர்.
குறைந்தபட்சம் ஆறு சம்பவங்கள் கன்டோனல் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளன. அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் புகுந்து திருட முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் நிறுத்தப்பட்டிருந்த காரையும் சோதனையிட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை காலை 9:40 மணியளவில் குடியிருப்பாளரிடமிருந்து ஒரு முக்கியமான ஒரு எச்சரிக்கை வந்தது. அவரது குடியிருப்புக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் இருப்பதாக அவர் தெரிவித்தார். பல போலீஸ் குழுக்கள் உடனடியாக தேடத் தொடங்கி பத்து நிமிடங்களுக்குப் பிறகு அந்த நபரைப் பிடிக்க முடிந்தது.

கைது செய்யப்பட்ட நபர் 17 வயதான அல்ஜீரியர் ஆவார். சோதனையின் போது, போலீசார் கொள்ளையடித்த நகைகளை கண்டுபிடித்தனர். சந்தேக நபர் தற்காலிகமாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மேலும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என்றும், இதற்கு உடந்தையாக இருப்பவர்கள் இருக்கிறார்களா என்றும் விசாரணை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே இரவில், ப்ரூக்கில் (Brugg) உள்ள நியூமார்க் ஷாப்பிங் சென்டரில் உள்ள கடைகளில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. சில குற்றவாளிகள் பொருட்களை திருடி தப்பிக்க முடிந்தது. இருப்பினும், இந்த சம்பவங்களுக்கும் வின்டிஸ்சில் நடந்த திருட்டு சம்பவங்களுக்கும் தொடர்பில்லை என்று போலீசார் கருதுகின்றனர்.
பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும், சந்தேகத்திற்கிடமான அவதானிப்புகள் இருந்தால் உடனடியாக தெரிவிக்குமாறும் கன்டோனல் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். குற்றவாளிகளை பிடிக்கவும், மேலும் குற்றச்செயல்களை தடுக்கவும் விசாரணை நடந்து வருகிறது.
(c) Kantonspolizei Aargau