சுவிட்சர்லாந்தின் மொத்த சனத்தொகை ஒன்பது மில்லியனாக உயர்வடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் சனத்தொகை 9 மில்லியனை தொடும் என SonntagsZeitung என்ற பத்திரிகை நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.
நிரந்தர மற்றும் நிரந்தமற்ற குடியிருப்பாளர்களை ஒன்றாக சேர்த்தால் சுவிட்சர்லாந்தின் மொத்த சனத்தொகை இந்த ஆண்டில் 9 மில்லியனை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கப்போகும் சுவிற்சர்லாந்தின் சனத்தொகை.! வெளியான அறிவிப்பு
மக்கள் சுதந்திரமாக நடமாட முடியும் என்ற ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்து கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டைத் தொடர்ந்து சுவிஸ் மக்கள் தொகை இவ்வாறு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த காலப் பகுதியில் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளை விடவும் சுவிட்சர்லாந்து இரண்டு மடங்கு சனத்தொகை அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது.
எவ்வாறெனினும், அதிகளவான குடிப்பெயர்வு இடம்பெறுவது நாட்டின் சுற்றாட்ல், உட்கட்டுமானம் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரம் என்பனவற்றில் தாக்கத்தை செலுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.