Uster ZH இல் வீதியில் நின்ற சேவல் – உரிமையாளரை தேடும் போலீசார்.! சுவிற்சர்லாந்தின் சூரிச் கன்டோன் Uster பகுதியில் சேவல் ஒன்று கைவிடப்பட்ட நிலையில் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மதியம் உஸ்டரில் உள்ள Ottenhauserstrasse பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறிப்பிட்ட பிரதேசத்தில் வசிப்பவர்கள் யாராவது தங்களுடைய சேவல் காணாமல் போயிருந்தால் போலீசாரை அணுகுமாறும் கேட்டுள்ளார்கள். போலீசாரும் இது பற்றிய விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
குறித்த சேவல் தொடர்பாக விபரம் தெரிந்தவர்கள் 044 944 76 66 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளமாறும் கேட்கப்பட்டுள்ளது.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.