Thurgau மாநிலம், Weinfelden போக்குவரத்து விபத்தில் மூவர் காயம்.!! – Thurgau மாநிலம், Weinfelden இல் சனிக்கிழமை இரண்டு கார்கள் மோதியதில், மூன்று பேர் காயமடைந்தனர், அவர்களில் இருவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியதாயிற்று.
மதியம் 1 மணிக்குப் பிறகு, 59 வயதான டிரைவர் ஒருவர் Weinfelden திசையில் Frauenfelderstrasse ல் ஓட்டிக்கொண்டிருந்தார். நகரத்திற்குள் நுழைவதற்கு முன், அவர் இடதுபுறம் Bettelbrünneliweg பகுதிக்கு திரும்ப முற்பட்டபோது எதிரே வந்த 60 வயது முதியவரின் கார் மீது மோதியது.

60 வயதான சாரதி மற்றும் அவரது 54 வயது பயணி மிதமான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். மற்றும் விபத்தை ஏற்படுத்திய நபருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன. விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சொத்து சேதம் பல பல்லாயிரக்கணக்கான பிராங்குகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.. இடம்பெற்ற பகுதியில் மீட்புபணிகள் இடம்பெற்ற காரணத்தினால் , பாதிக்கப்பட்ட சாலைப் பகுதியை சுமார் மூன்று மணி நேரம் மூட வேண்டியிருந்தது.
போக்குவரத்து உள்ளுர் சாலைகள் வழியாக மாற்றப்பட்டுதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.