Tessin மாகாணத்தில் இருவருக்கிடையே வாக்குவாதம் – ஒருவருக்கு கத்திக்குத்து.!
Tessin மாகாணத்தில் இருவருக்கிடையே வாக்குவாதம் – ஒருவருக்கு கத்திக்குத்து.! Tessin மாகாணத்தில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவதாத்தில் ஒருவர் கழுத்தில் கத்திக்கீறல்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் :-
அரசு வழக்கறிஞர் அலுவலகம் மற்றும் கன்டோனல் காவல்துறையின் கூற்றுப்படி, பிப்ரவரி 13, 2023 அன்று மாலை 5 மணிக்குப் பிறகு, Chiasso வில் உள்ள வயா டெல் என்ற இடத்தில் இரண்டு நபர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆரம்ப அறிக்கைகளின் படி, இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி ஒருவர் கையில் வைத்திருந்த சிறிய கத்தி மூலம் மற்றவரின் கழுத்தில் கீறியுள்ளார். இதில் வசிக்கும் 54 வயதான மொராக்கோ நாட்டவரின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதில் காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவத்தின் போது Mendrisiotto இல் வசிக்கும் 63 வயதான இத்தாலிய பிரஜை ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான முக்கிய குற்றச்சாட்டுகள் கொலை முயற்சி, மோசமான தாக்குதல் என்பவற்றின் கீழ் வழக்கு தொடரப்பட்டள்ளதாக கன்டோன் போலீசார் தெரிவித்தார்கள். மேலும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளையும் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.