21 609a4

வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல ஆவலுடன் காத்திருக்கும் சுவிஸ் குடிமக்கள்

2 0

கோடை என்றாலே நாடு நாடாக சுற்றுலா செல்பவர்களை வீட்டுக்குள்ளேயே அடைத்துப் போட்டால் எப்படி இருக்கும்? எப்போது இந்த கொரோனா தீரும், கட்டுப்பாடுகள் எப்போது நெகிழ்த்தப்படும், எப்போது சுற்றுலா செல்வோம் என்ற ஏக்கம் இருந்துகொண்டே இருக்கும் அல்லவா?

அவ்வகையில், சுவிஸ் குடிமக்கள் இந்த கோடை விடுமுறையில் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதா, அப்படியென்றால், தங்களுக்கு பிடித்தமான நாடுகளில் எந்தெந்த நாடுகளுக்குச் சுற்றுலா செல்லலாம் என்பது போன்ற கேள்விகளுக்கு விடையளிக்க முயல்கிறது இந்த செய்தி…

இத்தாலி

இத்தாலியைப் பொருத்தவரை, சுவிஸ் மக்கள் பாரம்பரியமாக சுற்றுலா செல்லும் ஒரு நாடாகும் அது.

ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டவர்கள், கொரோனாவிலிருந்து விடுபட்டவர்கள் மற்றும் பயணம் புறப்படுவதற்கு 48 மணி நேரம் முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரம் வைத்திருப்பவர்கள் ஆகியோர் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி இத்தாலிக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

பிரான்ஸ்

சுவிஸ் நாட்டவர்களுக்கு மிகவும் பிடித்தமான மற்றொரு சுற்றுலாத்தலம் பிரான்ஸ். பிரான்சுக்கு செல்லும் சுவிஸ் குடிமக்களுக்கு எவ்வித தடையும் கிடையாது, தனிமைப்படுத்தலும் கிடையாது.

ஆனாலும், நீங்கள் பிரான்ஸ் எல்லையிலிருந்து 30 கிலோமீற்றருக்கு அதிக தொலைவில் வசிப்பவர் அல்லது 24 மணிநேரத்துக்கு அதிகமாக பிரான்சில் இருக்க விரும்புகிறீர்கள் என்றால், உங்களுக்கு கொரோனா இல்லை என்பதைக் காட்டும் பி.சி.ஆர் சோதனை முடிவு மற்றும் உங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை, அத்துடன், கொரோனா தொற்றிய யாருடனும் நீங்கள் தொடர்பில் இல்லை என்பதை தெரிவிக்கும் சுய விளக்க ஆவணம் ஆகியவற்றை நீங்கள் உடன் வைத்திருக்கவேண்டும்.

வெளிநாடுகளுக்கு
வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல ஆவலுடன் காத்திருக்கும் சுவிஸ் குடிமக்கள்

ஜேர்மனி

ஜேர்மனிக்கு விமானப்பயணம் மேற்கொள்ளும் யாராக இருந்தாலும், பயணம் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் பரிசோதனை செய்துகொண்டு, தங்களுக்கு கொரோனா இல்லை என காட்டும் ஆவணத்தை சமர்ப்பிக்கவேண்டும்.

அதிக அபாயம் கொண்ட பகுதிகளிலிருந்து வருவோருக்கு ஜேர்மனியில் தனிமைப்படுத்தல் உண்டு, என்றாலும், அந்த பட்டியலில் சுவிட்சர்லாந்து இல்லாததால் சுவிஸ் மக்களுக்கு தனிமைப்படுத்தல் இல்லை.

ஆஸ்திரியா

மே 19ஆம் திகதி, ஆஸ்திரியா, பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான தனிமைப்படுத்தலை நெகிழ்த்த உள்ளது, சுவிட்சர்லாந்து உட்பட. இருந்தாலும், மொத்த நாடுகளுக்கும் விலக்கு அளிக்கப்படுமா, அல்லது சுவிட்சர்லாந்து செய்வதுபோல, நாடுகளின் சில மாகாணங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுமா என்பது இப்போதைக்கு தெரியவில்லை.

இதில் கவனிக்கவேண்டிய இன்னொரு விடயம் என்னவென்றால், இந்த நாடுகளுக்குச் சென்றுவிட்டு சுவிட்சர்லாந்துக்கு திரும்பும்போது, சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் தனிமைப்படுத்துதல் உண்டு என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.

இன்னொரு விடயம், கோடையின்போது பல நாடுகள் தங்கள் கட்டுப்பாடுகளை நெகிழ்த்த வாய்ப்புள்ளது என்பதால், சற்று பொறுத்திருந்து, அதை கவனித்து சுற்றுலா செல்வதற்கான பயணச்சீட்டுகளை முன் பதிவு செய்தல் நலம்!

Related Post

21 609fcd9f6cc30

சுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் காணாமல் போன செல்வந்தர் இறந்து விட்டதாக நீதிமன்றம் அறிவிப்பு

Posted by - May 16, 2021 0
சுவிட்ஸர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்போன செல்வந்தரான Karl-Erivan Haub உயிரிழந்து விட்டதாக ஜேர்மனிய நீதிமன்றம் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 58 வயதான Karl-Erivan…
சுவிற்சர்லாந்தில்,கொரேனா தடுப்பூசி

கோவிட் தடுப்பூசி தொடர்பில் சுவிஸ் வாழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Posted by - November 24, 2021 0
சுவிற்சர்லாந்து நாட்டில் வாழும் மக்கள் கோவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் அவர்களிடம் செல்லுபடியான மருத்துவக் காப்புறுதி பத்திரமும், வதிவிட அனுமதிப்பத்திரமும் இருத்தல் வேண்டும் . இவை இரண்டும்…
சுவிட்சர்லாந்தில்

சுவிட்சர்லாந்தில் புகலிட கோரிக்கையாளர்களை முரட்டுத்தனமாக தாக்கிய காவலர்கள் இடைநீக்கம்

Posted by - May 9, 2021 0
சுவிட்சர்லாந்தில் புகலிடக்கோரிக்கையாளர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள காவல் மையங்களில் பணி செய்த பாதுகாவலர்கள் பலர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். கடந்த சில மாதங்களாக புகலிடக்கோரிக்கையாளர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள காவல் மையங்களில்…

வன்முறையை தடுக்கும் முழுப்பணியில் ஈடுபட்டுள்ள சென்ட் காலன் காவல் துறையினர்.!!

Posted by - April 8, 2021 0
வன்முறையை தடுக்கும் முழுப்பணியில் ஈடுபட்டுள்ள சென்ட் காலன் காவல் துறையினர்.!! சென்ட் கேலன் நகர காவல்துறை அடுத்த வெள்ளிக்கிழமை மீண்டும் விரிவான அடையாள சோதனைகளை மேற்கொள்ள விரும்புவதாக…
Starkenbach இல் திடீரென வெடித்து சிதறிய வீடு

Starkenbach இல் திடீரென வெடித்து சிதறிய வீடு – உள்ளே இருந்த 50 வயது நபருக்கு நடந்த விபரீதம்.!!

Posted by - April 21, 2021 0
Starkenbach இல் திடீரென வெடித்து சிதறிய வீடு – உள்ளே இருந்த 50 வயது நபருக்கு நடந்த விபரீதம்.!! ஞாயிற்றுக்கிழமை காலை, Starkenbach, Toggenburg பகுதியில் வயோதிபர்…