சுவிட்சர்லாந்து விசா

வடகொரியாவுக்கு அவசர கோரிக்கை – சுவிஸ் நிர்வாகம்

1 0

வடகொரியாவுக்கு அவசர கோரிக்கை – சுவிஸ் நிர்வாகம் வடகொரியாவில் தொடர்ந்து மனித உரிமைகள் நசுக்கப்படுவதாக சுவிஸ் நிர்வாகம் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கான சுவிஸ் பிரதிநிதிகளில் ஒருவரான Felix Baumann, வட கொரியாவில் மனித உரிமைகள் தொடர்பில் குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் இல்லாதது குறித்து சுவிஸ் நிர்வாகம் கவலைப்படுவதாக புதன்கிழமை மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்தார்.

மட்டுமின்றி, வடகொரியாவில் முன்னெடுக்கப்படும் மனித உரிமை அத்துமீறல்கள், தடுப்பு மையங்களில் சித்திரவதை மற்றும் கட்டாய உழைப்பு உள்ளிட்டவை கட்டாயம் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடகொரியாவுக்கு அவசர கோரிக்கை, சுவிஸ் நிர்வாகம்

மேலும், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு வடகொரியா அடிப்படை உரிமைகளை மறுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டுமின்றி, வடகொரியாவில் இருந்து வெளியேற முற்படும் மக்களை கண்ட உடனையே சுட்டுக்கொல்வதும் கண்டனத்திற்கு உரியது என குறிப்பிட்டுள்ள அவர்,

கொரோனா தனிமைப்படுத்தலில் இருந்து தப்பிக்கும் மக்களை கொலை செய்துள்ளதும் கைது செய்துள்ளதும் உலக நாடுகள் வன்மையான கண்டனங்களை பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்

மட்டுமின்றி, உலக நாடுகள் உதவ முன்வரும் போது வட கொரியா அதை ஏற்க முன்வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Post

எல்லை மீறிய செக்ஸ்

எல்லை மீறிய செக்ஸ் – மருத்துவரின் விளையாட்டால் பெண் மரணம்

Posted by - March 18, 2021 0
எல்லை மீறிய செக்ஸ் – பெண் மரணம் – மருத்துவர் விடுதலை, எல்லை மீறிய செக்ஸ் – மருத்துவரின் விளையாட்டால் பெண் மரணம் – கவனக்குறைவால் ஏற்பட்ட…
பிரான்சில்

பிரான்சில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட 8 வயது சிறுமி சுவிஸில் பத்திரமாக மீட்பு

Posted by - April 19, 2021 0
பிரான்சில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட 8 வயது சிறுமி சொந்த தாயாருடன் சுவிட்சர்லாந்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். சிறுமியை கடத்திய குற்றத்திற்காக தாயார் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மிக…
Anil ampaani

அனில் அம்பானியின் சுவிஸ் வங்கிக்கணக்கு விவரங்களை வெளியிடவேண்டும்…

Posted by - May 14, 2021 0
ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானியின் சுவிஸ் வங்கிக்கணக்கு விவரங்களை வெளியிடுமாறு சுவிஸ் வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி மற்றும்…
ScreenShot 20210314204156

திச்சினோ மாநில பத்திரிகையில் இடம்பிடித்த ஈழத்தமிழர்களின் போராட்டம்

Posted by - March 14, 2021 0
திச்சினோ மாநில பத்திரிகையில் இடம்பிடித்த ஈழத்தமிழர்களின் போராட்டம் – சுவிஸ் நாட்டின் திச்சினோ மாநில வெளிவருகின்ற பத்திரிகை ஒன்றான 20 Minuten பத்திரிகையில் தாயகத்தில் தமிழ் மக்கள்…
Schwyz

பல ஆண்டுகளாக ஆயதங்கள் திருடி விற்ற நபர் சுவிற்சர்லாந்தில் கைது.!!

Posted by - April 24, 2021 0
பல ஆண்டுகளாக ஆயதங்கள் திருடி விற்ற நபர் சுவிற்சர்லாந்தில் கைது.!! சுவிட்சர்லாந்தில் பொலிசாருக்கான துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை திருட்டுத்தனமாக விற்று பல ஆண்டுகளாக சம்பாதித்த முன்னாள் அதிகாரி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *