மியான்மர் இராணுவ ஆட்சிக்குழு மீது கடும் நடவடிக்கை எடுத்த சுவிஸ்

5 0

மியான்மர் இராணுவ ஆட்சிக்குழு மீது கடும் நடவடிக்கை எடுத்த சுவிஸ்

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியாவைத் தொடர்ந்து, மியான்மரில் நடந்த ஆட்சிக்கவிழ்ப்பிற்கு காரணமானவர்கள் எனக் கருதப்படும் 11 பேர் மீது சுவிட்சர்லாந்து நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.

இராணுவ ஆட்சிக்குழு மக்களால் தெரிவு செய்யப்பட்ட மியான்மர் அரசாங்கத்தை கவிழ்த்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு சுவிஸ் நிர்வாகம் இந்த முடிவு வருகிறது. அப்போதிருந்து, ஆட்சி மாற்றத்தை எதிர்ப்பவர்கள் ஒரு பயங்கரமான ஒடுக்குமுறையை எதிர்கொண்டு வருகின்றனர்.

கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை சுவிஸ் அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

மியான்மர்

இதில், மியான்மர் தளபதி மின் ஆங், ஒன்பது உயர் ராணுவ அதிகாரிகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆகியோருக்கு எதிராகவே சுவிட்சர்லாந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இவர்கள் இனி சுவிட்சர்லாந்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. மட்டுமின்றி, இவர்களின் எந்த சொத்துகளும் முடக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, மியான்மர் முழுவதும் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் நடந்த வன்முறையில் ஏழு குழந்தைகள் உட்பட குறைந்தது 107 பேர் சனிக்கிழமை கொல்லப்பட்டனர்.

பிப்ரவரி 1 ம் தேதி நடந்த ஆட்சி கவிழ்ப்பிற்கு பின்னர் இதுவரை 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source:- Lankasri

Related Post

சுவிற்சர்லாந்தில்,கொரேனா தடுப்பூசி

சுவிற்சர்லாந்தில் அடுத்தடுத்து 21 பேர் மரணம் – கொரேனா தடுப்பூசியின் கோரம்.!!

Posted by - March 12, 2021 0
சுவிற்சர்லாந்தில் அடுத்தடுத்து 21 பேர் மரணம் – கொரேனா தடுப்பூசியின் கோரம்.!! கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல்வேறு நாடுகளில் இன்று ஏற்றப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் கொரோனா தடுப்பூசி…
changes into effect in switzerland from today

சுவிட்சர்லாந்தில் இன்று முதல் அமுலுக்கு வரும் மாற்றங்கள்

Posted by - April 19, 2021 0
சுவிட்சர்லாந்தில் இன்று முதல் அமுலுக்கு வரும் மாற்றங்கள் அரசு அறிவித்தபடி இன்றும், இன்று முதலும் சுவிட்சர்லாந்தில் பல விடயங்கள் நடைபெற உள்ளன. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.…
186433443 313199466985505 3418441560723949888 n

சுவிசில் மூன்று நகரங்களில் ஆரம்பமான நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப் பயணம்!

Posted by - May 16, 2021 0
நாள் 01 (14.05.2021) நேற்றைய தினம் (14.05.2021) காலை பாசல், செங்காளன், கிளாறூஸ் ஆகிய மாநிலங்களிலிருந்து தமிழீழ விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்த மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்குமாக அகவணக்கத்துடனும், உறுதிமொழியுடனும்…
swiss tamil news, corona vaccine in swiss, swiss news in tamil

கொரோனா தடுப்பூசியால் பாதிக்கப்படும் பெண்கள் : சுவிசில் வெளியான அதிர்ச்சி தகவல்

Posted by - March 13, 2021 0
சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் இதுவரை 597 பேர் பக்க விளைவுகளை எதிர்கொண்டுள்ள நிலையில், அதில் பெரும்பாலானோர் பெண்கள் என தெரியவந்துள்ளது.

Wetzikon இல் உள்ள பள்ளிகளில் 720 மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா சோதனை

Posted by - April 8, 2021 0
Wetzikon இல் உள்ள பள்ளிகளில் 720 மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா சோதனை. வெட்ஸிகானில் உள்ள இரண்டு மேல்நிலைப் பள்ளிகளில் கொரோனா அதரிகத்தைமையினால் சுமார் 620 மாணவர்களும்…