பாய்ந்து வந்த ரயில்

பாய்ந்து வந்த ரயில்… பெண்ணை சட்டென்று தள்ளிவிட்ட நபர்: சுவிஸில் பகீர் கிளப்பிய சம்பவம்

12 0

சூரிச் பிரதான ரயில் நிலையத்தில் பாய்ந்து வந்த ரயிலுக்கு முன்பு பெண் ஒருவரை இளைஞர் தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் துரிதமாக செயல்பட்ட பொலிசார் அந்த இளைஞரை கைது செய்துள்ளனர். வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமார் 4.30 மணிக்குப் பிறகு நடந்த இச்சம்பவத்தில், ரயில் சாரதி சமயோசிதமாக செயல்பட்டு, அவசரமாக ரயிலை நிறுத்தியுள்ளார்.

இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதுடன், சிறு காயங்களுடன் 40 வயதான அந்த பெண்மணி தப்பியுள்ளார்.

பாய்ந்து வந்த ரயில்

தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த சூரிச் மண்டல பொலிசார், எரித்திரியா நாட்டவரான அந்த 27 வயது இளைஞரை கைது செய்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் அந்த இளைஞருக்கும் எந்த அறிமுகமும் இல்லை என்றே தெரிய வந்துள்ளது.

அந்த இளைஞர் மீது கொலை வழக்கு பதியப்பட்டு, விசாரணையை அவர் எதிர்கொள்ள நேரிடும் என தெரிய வந்துள்ளது.

Source;- lankasri.com

Related Post

கோவிட்

கோவிட் விதிகளை கடுமையாக்க வேண்டிய அவசியம் இல்லை – சுவிஸ் அரசாங்கம்

Posted by - November 25, 2021 0
கோவிட் விதிகளை கடுமையாக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சுவிஸ் அரசாங்கம் கூறியுள்ளது. சுவிட்சர்லாந்தில் கோவிட் நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ள போதிலும், புதிய நாடு தழுவிய கோவிட் கட்டுப்பாடு…
சுவிற்சர்லாந்து உணவகங்கள்

மீண்டும் இழுத்து மூடப்படும் சுவிற்சர்லாந்து உணவகங்கள் – அரசு அறிவிப்பு

Posted by - March 19, 2021 0
மீண்டும் இழுத்து மூடப்படும் சுவிற்சர்லாந்து உணவகங்கள் – அரசு அறிவிப்பு – சுவிட்சர்லாந்தில் அமுலில் இருக்கும் பகுதி நேர பொதுமுடக்கம் நெகிழ்த்தப்படுமா அல்லது கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்படுமா…
சென்ட்காலன் மாநிலம்

சென்ட்காலன் மாநிலம் Jonschwil பகுதியில் வீடு முற்றாக எரிந்து சேதம்.!!

Posted by - April 21, 2021 0
சென்ட்காலன் மாநிலம் Jonschwil பகுதியில் வீடு முற்றாக எரிந்து சேதம்.!! புதன்கிழமை, அதிகாலை 1:20 மணிக்குப் பிறகு,  Lütisburgerstrasse in Jonschwil SG ல் ஒரு ஒற்றை…
சுவிஸில், பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு அனுமதி

சுவிட்சர்லாந்தில் பூஸ்டர் தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு அனுமதி

Posted by - November 24, 2021 0
சுவிட்சர்லாந்தில் பூஸ்டர் தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பைசர் பயோடெக் கோவிட் தடுப்பூசியை பூஸ்டர் அல்லது மூன்றாம் மருந்தளவு தடுப்பூசியாக ஏற்றுவதற்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…
21 609a4

வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல ஆவலுடன் காத்திருக்கும் சுவிஸ் குடிமக்கள்

Posted by - May 12, 2021 0
கோடை என்றாலே நாடு நாடாக சுற்றுலா செல்பவர்களை வீட்டுக்குள்ளேயே அடைத்துப் போட்டால் எப்படி இருக்கும்? எப்போது இந்த கொரோனா தீரும், கட்டுப்பாடுகள் எப்போது நெகிழ்த்தப்படும், எப்போது சுற்றுலா…