தடுப்பூசி

தடுப்பூசி போட மறுத்தால் வெளியேற்றப்படுவீர்கள்… சுவிஸ் அதிரடி தகவல்

29 0

தடுப்பூசி போட மறுத்தால் வெளியேற்றப்படுவீர்கள்… சுவிஸ் அதிரடி தகவல்

சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பவர்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என ஃபெடரல் கவுன்சில் அறிவித்துள்ளது. சிலர் இதை கட்டாய தடுப்பூசித் திட்டம் என விமர்சிக்க, மற்றவர்களோ ரிஸ்க் எடுத்து பொறுப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு சலுகைகள் வழஙக்வேண்டாமா என்கிறார்கள்.

பிரேசிலிய பெண்ணுக்கு சூரிச் குடிவரவு அலுவலகத்தில் நடந்த சம்பவம்..!!

சுவிஸ் சுகாதாரத்துறை அமைச்சர் Alain Berset இது குறித்துக் கூறும்போது, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு சுதந்திரத்தை மறுப்பது அநீதி என்றார்.

உண்மைதான் என்று கூறும் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Regine Sauter, தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுக்கும் சிலரால், மற்றவர்கள் அனைவரும் கட்டுப்பாடுகளுக்குள் வாழவேண்டியிருப்பது நியாயமல்ல என்கிறார்.

தடுப்பூசி
தடுப்பூசி போட மறுத்தால் வெளியேற்றப்படுவீர்கள்

தேசிய நெறிமுறைகள் கமிட்டியும் அதை ஆமோதிக்கிறது. துணை அதிபரான Markus Zimmermann, மருத்துவமனைகளுக்கு அழுத்தத்தை உண்டாக்கும் தடுப்பூசி மறுப்போருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டும் என்கிறார்.

தடுப்பூசி போட மறுத்தால் வெளியேற்றப்படுவீர்கள்... சுவிஸ் அதிரடி தகவல்

இவர்கள் எல்லாரும் இப்படி மென்மையாக சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில், சுவிஸ் பத்திரிகையான Blick, தடுப்பூசி போட மறுப்போரை முரட்டுத்தனமான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்துள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொண்டதை நிரூபிக்கும் சான்றிதழ் இல்லாதவர்கள் உணவகங்கள், மதுபான விடுதிகள் மற்றும் உடற்பயிற்சி மையங்களிலிருந்து வெளியே தூக்கி வீசப்படுவார்கள் என்று கூறியுள்ளது அந்த பத்திரிகை!

Source:- Lankasri

Related Post

சுவிஸில், கல்வி நிறுவனங்கள், தொடர் வெடிகுண்டு, மிரட்டல்

சுவிஸில் கல்வி நிறுவனங்கள் மீது தொடர் வெடிகுண்டு மிரட்டல்

Posted by - March 30, 2021 0
சுவிஸில் கல்வி நிறுவனங்கள் மீது தொடர் வெடிகுண்டு மிரட்டல் சுவிஸில் கல்வி நிறுவனங்கள் மீது தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான நால்வருக்கு கடுமையான அபராதமும்…
swiss-police-in-zurich

சூரிச் நகரில் புகுந்த ஆயுதம் தாங்கிய போலீசார் : அலறித்துடித்த மக்கள்

Posted by - March 22, 2021 0
சூரிச் நகரில் புகுந்த ஆயுதம் தாங்கிய போலீசார் : அலறித்துடித்த மக்கள் – சுவிட்சர்லாந்தில், திடீரென ஆயுதம் தாங்கிய பொலிசார் ரயிலில் திபுதிபுவென நுழைய, பயணிகள் சிலர்…
21 6085ed7900c38

கொரோனாவால் 3 மில்லியன் மக்கள் பாதிப்பு : உறுதிப்படுத்திய சுவிஸ் அரசாங்கம்

Posted by - April 27, 2021 0
சுவிட்சர்லாந்தில் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் மக்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் மூன்றில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் பெரும்பாலானோருக்கு அது…
சுவிட்சர்லாந்தில் பூஸ்டர் தடுப்பூ

சுவிட்சர்லாந்தில் பூஸ்டர் தடுப்பூசிக்கு அங்கீகாரம்! முதலில் யாருக்கு கிடைக்கும்?

Posted by - November 24, 2021 0
சுவிட்சர்லாந்தில் ஃபைசர் கோவிட்-19 தடுப்பூசியை பூஸ்டர் (மூன்றாவது டோஸ்) தடுப்பூசியாக பயன்படுத்த அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் மருந்து ஒழுங்குமுறை அமைப்பு ஃபைசர் தடுப்பூசியை 16 வயது முதல்…
swiss resturant, swiss hotel, swiss news in tamil

சுவிற்சர்லாந்தில் உணவங்கள் எப்போது திறக்கப்படும் – வெளியான அறிவிப்பு.!

Posted by - March 12, 2021 0
சுவிற்சர்லாந்தில் அதிகரித்த கொரோனா காரணமாக கடந்த டிசம்பர் 22 திகதி முதல் உணவு விடுதிகள் உணவகங்கள் இழுத்து மூடப்பட்டு லாக் டவுண் அறிவிக்கப்பட்டது.