சென்காலன் மாநிலத்தில் 100 பேருக்கு தண்டப்பணம் விதித்த போலீசார்

1 0

சென்காலன் மாநிலத்தில் தடைகளை மீறி, நேற்று நடைபெற்ற பார்டி நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட சுமார் 100 பேருக்கு செங்காலன் காவல்துறையின் குற்றப்பணம் அறவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெளியிடங்களில் 15 பேருக்கு அதிகமாக மக்கள் கூடுவதும், விருந்துபசாரங்கள் செய்வதற்குமான தடையுத்தரவு தற்போது நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த தடை உத்தரவை மீறி செயற்பட்டவர்கள் மீதே இவ்வாறு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய மாறுபாடு அதிகரிப்பினால்இ பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பதா ? என்பது குறித்து விவாதிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளின் அதிகாரிகள் நேற்று சந்திப்பு ஒன்றை நடாத்தியுள்ளனர்.

சென்காலன் மாநிலத்தில்

முதலில் திட்டமிட்டபடி, மீதமுள்ள சில கட்டுப்பாடுகள் மார்ச் 22 ந்திகதி அல்லது ஏப்ரல் 1 ம் திகதி வரை தொடர வேண்டுமா என்று மத்திய அரசும் மற்றும் மாநில அரசுகளும் இன்று பிற்பகல் விவாதிக்க திட்டமிட்டுள்ளன.

குறிப்பாக உணவகங்களை மீண்டும் திறப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆராயப்படவுள்ளது. இது தொடர்பில் ஆராய தொழில்துறை மற்றும் சில அரசியல் குழுக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதுவாயினும் இந்த விவாதங்களின் இறுதி முடிவு மார்ச் 19 அன்று எடுக்கப்படும். ஆனால் அதிகரித்து வரும் தொற்றுநோய்களைக் கருத்தில் கொண்டு, ஆரம்பகால மறு திறப்புகள் விரைவாக அமையச் சாத்தியங்கள் இருக்காது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

Related Post

swiss tamil news, corona vaccine in swiss, swiss news in tamil

கொரோனா தடுப்பூசியால் பாதிக்கப்படும் பெண்கள் : சுவிசில் வெளியான அதிர்ச்சி தகவல்

Posted by - March 13, 2021 0
சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் இதுவரை 597 பேர் பக்க விளைவுகளை எதிர்கொண்டுள்ள நிலையில், அதில் பெரும்பாலானோர் பெண்கள் என தெரியவந்துள்ளது.
swiss chees scaled

500 கிலோ சீஸ் … சமூக ஊடகங்களில் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

Posted by - April 18, 2021 0
சுவிட்சர்லாந்தில் சீஸ் தயாரிப்பாளர் ஒருவர் 500 கிலோ சீஸ் தயாரித்து வியாபாரி ஒருவருக்கு அனுப்பி வைத்தார். ஆனால், அந்த சீஸ் சரியாக பார்சல் செய்யப்படவில்லை என்று கூறி…
கோடையில்,குடிநீர் பற்றாக்குறை,குளிர்காவெள்ளம்,எச்சரிக்கை

சுவிட்சர்லாந்துக்கு ஒரு எச்சரிக்கை.!! – ஏற்படப்போகும் இயற்கை அனர்த்தம்

Posted by - March 18, 2021 0
சுவிட்சர்லாந்துக்கு ஒரு எச்சரிக்கை.!! – ஏற்படப்போகும் இயற்கை அனர்த்தம்- பருவநிலை மாற்றங்களால் சுவிட்சர்லாத்துக்கு பெரும் ஆபத்து நேரிட இருப்பதாக அரசு ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பருவநிலை பாதுகாப்பு…
swiss baby citizen

சுவிட்சர்லாந்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏன் சுவிஸ் குடியுரிமை இல்லை..?

Posted by - March 13, 2021 0
அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள், தானாகவே அந்த நாட்டின் குடிமக்களாகிவிடுவார்கள். ஆனால் சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை அப்படியில்லை.
பிரான்சில்

பிரான்சில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட 8 வயது சிறுமி சுவிஸில் பத்திரமாக மீட்பு

Posted by - April 19, 2021 0
பிரான்சில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட 8 வயது சிறுமி சொந்த தாயாருடன் சுவிட்சர்லாந்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். சிறுமியை கடத்திய குற்றத்திற்காக தாயார் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மிக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *