சுவிஸ் பெர்ன்

சுவிஸ் பெர்ன் மண்டலத்தில் பற்றி எரிந்த வீடு – 6 பேர் மருத்துவமனையில்.!!

4 0

சுவிஸ் பெர்ன் மண்டலத்தில் பற்றி எரிந்த வீடு – 6 பேர் மருத்துவமனையில்.!!

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் குடியிருப்பு ஒன்று தீ பிடித்து எரிந்ததில், தாயாரும் அவரது 5 பிள்ளைகளும் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.

பெர்ன் மண்டலத்தின் Pieterlen பகுதியிலேயே வெள்ளிக்கிழமை குறித்த குடியிருப்பு தீ விபத்தில் சிக்கியுள்ளது.

தகவல் அறிந்த பொலிசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவப்பகுதிக்கு விரைந்து சென்ற நிலையில், அந்த குடியிருப்பானது மொத்தமும் தீக்கிரையாகியிருந்தது.

பேர்ன்
பேர்ன்

இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் மூன்று குழுவாக பிரிந்து, போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதனிடையே, தீ விபத்தை அடுத்து அதில் குடியிருந்த பலர் உயிருக்கு பயந்து வெளியேறியுள்ள நிலையில், தாயார் ஒருவரும் அவரது 5 பிள்ளைகளும் தீ விபத்தில் சிக்கியுள்ளனர்.

அவர்களை மீட்டு, உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர். நெருப்பினால் ஏற்பட்ட வாயு தாக்கி அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றே கூறப்படுகிறது.

தீ விபத்தில் சிக்கிய குடியிருப்பானது மொத்தமும் சேதமடைந்துள்ளதால், தற்போதைய சூழலில் அதில் குடியிருக்க முடியாது என்றே தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, நகராட்சியின் உதவியுடன், பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு இடைக்கால தீர்வு காணப்பட்டது.

இந்த நிலையில், தீ விபத்துக்கான காரணம் மற்றும் தீவிபத்தால் ஏற்பட்ட சேதத்தின் அளவு குறித்து தெளிவுபடுத்த பெர்ன் மண்டல பொலிசார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

Source

Related Post

எத்தியோப்பியாவிலிருந்து

எத்தியோப்பியாவிலிருந்து வெளியேறுமாறு சுவிஸ் பிரஜைகளுக்கு அறிவுறுத்தல்

Posted by - November 24, 2021 0
எத்தியோப்பியாவிலிருந்து வெளியேறுமாறு தமது நாட்டுப் பிரஜைகளுக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவின் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து செல்வதாக சுட்டிக்காட்டியுள்ளது. எந்தவொரு…
21 6080a12a2d9ad

பிரேசிலிய பெண்ணுக்கு சூரிச் குடிவரவு அலுவலகத்தில் நடந்த சம்பவம்..!!

Posted by - April 22, 2021 0
பிரேசிலிய பெண்ணுக்கு சூரிச் குடிவரவு அலுவலகத்தில் நடந்த சம்பவம்..!! சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் தவித்த பிரேசிலிய பெண் ஒருவர், தகவல் தெரிந்து கொள்ள சென்ற இடத்தில்…

Wetzikon இல் உள்ள பள்ளிகளில் 720 மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா சோதனை

Posted by - April 8, 2021 0
Wetzikon இல் உள்ள பள்ளிகளில் 720 மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா சோதனை. வெட்ஸிகானில் உள்ள இரண்டு மேல்நிலைப் பள்ளிகளில் கொரோனா அதரிகத்தைமையினால் சுமார் 620 மாணவர்களும்…
21 609 swiss

எங்களை கைவிட்டனர்… வெளிநாடு வாழ் சுவிஸ் மக்கள் கவலை

Posted by - May 12, 2021 0
கொரோனா பரவும் இந்த இக்கட்டான சூழலில் சுவிஸ் நிர்வாகம் தங்களை கைவிட்டு விட்டதாக வெளிநாட்டு வாழ் சுவிஸ் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் பரவலாக அனைத்து மண்டலங்களிலும்…

சுவிஸில் திடீரென போராட்டத்தில் குதித்த மக்கள்… ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்திய பொலிஸ்

Posted by - April 11, 2021 0
சுவிஸில் திடீரென போராட்டத்தில் குதித்த மக்கள்… ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்திய பொலிஸ் சுவிஸில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்த மக்களை கலைக்க பொலிசார் pepper spray…