21 609fcd9f6cc30

சுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் காணாமல் போன செல்வந்தர் இறந்து விட்டதாக நீதிமன்றம் அறிவிப்பு

29 0

சுவிட்ஸர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்போன செல்வந்தரான Karl-Erivan Haub உயிரிழந்து விட்டதாக ஜேர்மனிய நீதிமன்றம் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

58 வயதான Karl-Erivan Haub சுவிஸர்லாந்து இத்தாலி எல்லையில் மலையேறும் பயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அவர் இறுதியாக 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் திகதி ஒரு பையுடன் மலையேறியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

[the_ad id=”1067″]

இந்த நிலையில் அவர் இறுதியாக தங்கியிருந்த ஹோட்டலில் காலையில் இருக்கவில்லை என்பதால், காணாமல்போயுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸார் அவரை தேடி வந்த நிலையில், ஒரு வாரத்தின் பின் குறித்த செல்வந்தர் உயிருடன் மீட்கப்படுவார் என்ற நம்பிக்கையை அவரது குடும்பத்தினர் கைவிட்டனர்.

21 609fcd9f6cc30

அத்துடன் அவரை தேடும் பணிகள் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் திகதி இரவு Karl-Erivan Haub இறந்து விட்டதாக ஜேர்மனிய நீதிமன்றம் நேற்று கூறியுள்ளது.

Karl-Erivan Haub ஜேர்மன் மற்றும் அமெரிக்க நாடுகளின் இரட்டை குடியுரிமையை பெற்றவர். Karl-Erivan Haub இறந்து விட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்குமாறு அவரது சகோதரர்கள், நிறுவனம் மற்றும் மனைவி ஆகியோர் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்திலேயே மனுதார் சமர்பித்த ஆதாரங்களால் திருப்தியடைவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Karl-Erivan Haub காணாமல் போனதை அடுத்து அவரது சகோதரான டெங்கொல்மேன் நிறுவத்தின் ஒரே தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

Karl-Erivan Haub மற்றும் அவரது சகோதரர் இணைந்து 2000 ஆம் ஆண்டு முதல் இந்த நிறுவனத்தை நடத்தி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post

சுவிஸ் செய்திகள் இன்று,Swiss Tamil News,சுவிற்சர்லாந்து செய்திகள்,சுவிஸ் செய்திகள்

சுவிஸ் செய்திகள் இன்று – சுவிற்சர்லாந்து செய்திகள் (22.03.21) – Swiss Tamil News

Posted by - March 22, 2021 0
சுவிஸ் செய்திகள் இன்று – சுவிற்சர்லாந்து செய்திகள் (22.03.21) – Swiss Tamil News , சுவிற்சர்லாந்து செய்திகளை தமிழ் மொழியில் தமிழர்களுக்காக வழங்கி கொண்டிருக்கிறோம். சுவிற்சர்லாந்து…
சுவிட்சர்லாந்தில் குடியுரிமை

சுவிட்சர்லாந்தில் குடியுரிமை கோருவதற்கான தேர்வில் கேட்கப்படும் சில வித்தியாசமான கேள்விகள்

Posted by - November 24, 2021 0
சுவிஸ் குடிமகனாக ஆக விரும்பும் அனைவரும், அதற்காக சுவிஸ் குடியுரிமைத் தேர்வு (citizenship exam) ஒன்றை எழுதி தேர்ச்சி பெறவேண்டும். அப்படி குடியுரிமைத் தேர்வில் கேட்கப்பட்டும் சில…
கோடையில்,குடிநீர் பற்றாக்குறை,குளிர்காவெள்ளம்,எச்சரிக்கை

சுவிட்சர்லாந்துக்கு ஒரு எச்சரிக்கை.!! – ஏற்படப்போகும் இயற்கை அனர்த்தம்

Posted by - March 18, 2021 0
சுவிட்சர்லாந்துக்கு ஒரு எச்சரிக்கை.!! – ஏற்படப்போகும் இயற்கை அனர்த்தம்- பருவநிலை மாற்றங்களால் சுவிட்சர்லாத்துக்கு பெரும் ஆபத்து நேரிட இருப்பதாக அரசு ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பருவநிலை பாதுகாப்பு…
21 609527a98403b

சுவிஸ் எல்லையில் சிக்கிய நபர்… விசாரணை அதிகாரிகளை அதிரவைத்த சம்பவம்

Posted by - May 9, 2021 0
சுவிஸ்- ஜேர்மனி எல்லை நகரமான Singen-ல் சுங்க அதிகாரிகளிடம் சிக்கிய நபரால் அதிகாரிகள் திகைத்துப் போயுள்ளனர். ஏப்ரல் மாத இறுதியில் சுவிஸில் இருந்து 44 வயதான ஒருவர்…