சுவிஸில்

சுவிஸில் மாயமான இளம்பெண்… சகோதரி கூறும் அதிர்ச்சி பின்னணி

3 0

சுவிட்சர்லாந்தில் இரட்டையர்களில் ஒருவரான 21 வயது இளம்பெண் மாயமான நிலையில், அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என சகோதரி சந்தேகம் தெரிவித்துள்ளார்.

லூசர்ன் மண்டலத்தில் Adligenswil பகுதியை சேர்ந்த 21 வயது Alishia Bucher என்பவர் ஏப்ரல் 21 முதல் காணாமல் போயுள்ளார்.

அவர் தொடர்பில், அவரது இரட்டை சகோதரியும், பொலிசாரும் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

[the_ad id=”1067″]

ஏப்ரல் 21 இரவு சுமார் 10.30 மணியளவில் தமது சகோதரியை கடைசியாக சந்தித்துக் கொண்டதாக செலினா தெரிவித்துள்ளார். மட்டுமின்றி ஏப்ரல் 22 மற்றும் 23ம் திகதி இரவில் இருவரும் மொபைலில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் செலினா தெரிவித்துள்ளார்.

அதிகாலை 4 மணியளவில் தம்மை ஒருமுறை தொடர்பு கொண்டதாக தெரிவித்துள்ள செலினா, அப்போது தமக்கு உடல்நிலை சரியில்லை என தெரிவித்ததாகவும், அந்த நேரம் அவர் வாகனம் ஒன்றில் பயணப்படுவதாக தாம் புரிந்து கொண்டதாகவும்,

[the_ad id=”993″]

மொபைலில் தாங்கள் பேசுவது அடிக்கடி தடைபட்டதாகவும், பின்னர் அழைப்பு துண்டிக்கப்பட்டதாகவும், அதனையடுத்து இதுவரை தம்மால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் செலினா தெரிவித்துள்ளார்.

சுவிஸில்,மாயமான,இளம்பெண்,அதிர்ச்சி பின்னணி
சுவிஸில் மாயமான இளம்பெண்… சகோதரி கூறும் அதிர்ச்சி பின்னணி

அதிகாலையில், தமது சகோதரியுடன் சென்ற மூவர் கும்பலே தமது சகோதரி மாயமாவதற்கு காரணம் என செலினா பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த வழக்கு தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவரும் பொலிசார், சந்தேகப்படும் வகையில் இதுவரை எந்த தகவலும் தங்களுக்கு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

தற்போது தமது சகோதரி Alishia Bucher தொடர்பில் துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களுக்கு அளித்து உதவி கோரி வருகிறார் செலினா.

Related Post

Transparent-security-key-swiss

கண்ணுக்கு தெரியாத பூட்டு.!! சுவிட்சர்லாந்தில் ஒரு ஆச்சரிய கண்டுபிடிப்பு.!!

Posted by - March 20, 2021 0
சுவிட்சர்லாந்தில்,  ஒரு ஆச்சரிய கண்டுபிடிப்பு – கண்ணுக்கு தெரியாத பூட்டு.!! சுவிஸ் நிறுவனம் ஒன்று, கண்ணுக்குத்தெரியாத பூட்டு ஒன்றை கண்டுபிடித்துள்ளது. பிளாஸ்டிக் பேப்பர் போல காணப்படும் இந்த…
medium 2021 05 30 2447edae47

சுவிஸில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கிய 6 மாத குழந்தை

Posted by - May 31, 2021 0
சுவிட்சர்லாந்தின் Graubünden மண்டலத்தில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 52 வயதான நபர் மரணமடைந்துள்ளதுடன் பிஞ்சு குழந்தை ஒன்று காயங்களுடன் தப்பியுள்ளது. Graubünden மண்டலத்தில்…
கோடையில்,குடிநீர் பற்றாக்குறை,குளிர்காவெள்ளம்,எச்சரிக்கை

சுவிட்சர்லாந்துக்கு ஒரு எச்சரிக்கை.!! – ஏற்படப்போகும் இயற்கை அனர்த்தம்

Posted by - March 18, 2021 0
சுவிட்சர்லாந்துக்கு ஒரு எச்சரிக்கை.!! – ஏற்படப்போகும் இயற்கை அனர்த்தம்- பருவநிலை மாற்றங்களால் சுவிட்சர்லாத்துக்கு பெரும் ஆபத்து நேரிட இருப்பதாக அரசு ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பருவநிலை பாதுகாப்பு…
பிரான்சில்

பிரான்சில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட 8 வயது சிறுமி சுவிஸில் பத்திரமாக மீட்பு

Posted by - April 19, 2021 0
பிரான்சில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட 8 வயது சிறுமி சொந்த தாயாருடன் சுவிட்சர்லாந்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். சிறுமியை கடத்திய குற்றத்திற்காக தாயார் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மிக…

ஆஸ்திரியாவின் முடக்கம் சுவிஸ் சுற்றுலாத்துறையில் சாதக நிலை

Posted by - November 24, 2021 0
ஆஸ்திரியாவின் முடக்கம் சுவிஸ் சுற்றுலாத்துறையில் சாதக நிலை- சுற்றுலாப் பயணிகள், சுவிட்சர்லாந்தின் ஸ்கை ரிசோர்ட்கள் நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். ஆஸ்திரியாவில் முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளதன் காரணமாக பெரும்…