சுவிட்சர்லாந்து விசா,சுவிஸ் செய்திகள்,சுவிஸில் புர்காவை,சுவிட்சர்லாந்து

சுவிஸில் புர்காவை அடுத்து இனி இதற்கு தடை வரலாம் : வெளியான புதிய தகவல்

1 0

சுவிஸில் புர்காவை அடுத்து இனி இதற்கு தடை வரலாம் : வெளியான புதிய தகவல் – சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய பெண்கள் பொதுவெளியில் புர்கா எனப்படும் முகம் மறைக்கும் ஆடைகளை அணிய எதிர்ப்பு தெரிவித்து, பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, 51.2% ஆதரவுடன் அது நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய பெண்கள் முகத்தை மொத்தமாக மறைக்கும் புர்காவுக்கு தடை கோரும் பொது வாக்கெடுப்பு நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கையாக இன்னொரு தடைக்கு கோரிக்கை வைக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் அவ்வாறான கோரிக்கைக்கு இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் 6 மண்டலங்களை தவிர எஞ்சிய அனைத்து மண்டலங்களும் புர்கா தடைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்து விசா,சுவிஸ் செய்திகள்,சுவிஸில் புர்காவை,சுவிட்சர்லாந்து

இந்த நிலையில் பாடசாலை மற்றும் சிறார் பள்ளிகளில் இஸ்லாமிய சிறுமிகள் தலையில் ஸ்கார்ஃப் அணிவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மத்திய தேசிய கவுன்சிலர் மரியன்னே பைண்டர்-கெல்லர் தற்போது முன்வந்துள்ளார்.

ஒரு பாடசாலை ஆசிரியரான தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை அடுத்தே, இவ்வாறான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக பைண்டர் தெரிவித்துள்ளார்.

தலையில் நாள் முழுவதும் ஸ்கார்ஃப் அணிந்து கொண்டு, பாடசாலை முன்னெடுக்கும் எவ்வித நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் சிறார்களுக்காகவே தமது இந்த முயற்சி என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் இந்த விவகாரம் தொடர்பில் பைண்டர் பெடரல் கவுன்சிலுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைத்திருந்தார்.

ஆனால் ஸ்கார்ஃப் தடை செய்யும் பெடரல் கவுன்சிலுக்கு இல்லை என அந்த வேண்டுகோளை நிராகரித்திருந்தது.

தற்போது மீண்டும் தமது முயற்சியை தொடங்கியுள்ள பைண்டருக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஒரு மதத்தின் அடிப்படை கொள்கைகளில் எது சரி, எது தவறு என்பதை வெளியாட்கள் தீர்மானிக்கக்கூடாது என இஸ்லாமிய அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

Related Post

பெண்கள் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் – சுவிற்சர்லாந்துக்கு ஏற்பட்ட நிலமை.!

Posted by - April 5, 2021 0
பெண்கள் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் – சுவிற்சர்லாந்துக்கு ஏற்பட்ட நிலமை.! உலக மக்கள் தொகையில் சுமார் பாதிப் பேர் பெண்கள். இருப்பினும், கல்வி, வேலை, சுதந்திரம் ஆகிய…
zurich nakai kadai

சூரிச் நகைக் கடைகளில் புகுந்து மில்லியன் கணக்கில் கொள்ளை.!!

Posted by - March 30, 2021 0
சூரிச் நகைக் கடைகளில் புகுந்து மில்லியன் கணக்கில் கொள்ளை.!! சுவிட்சர்லாந்தில் நகைக் கடைகளில் புகுந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட செர்பிய இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.…
சொலர்த்தூன் மாநிலத்தில் கடை ஒன்றில் மர்ம நபர்கள்

சொலர்த்தூன் மாநிலத்தில் கடை ஒன்றில் மர்ம நபர்கள் செய்த செயல் – போலீசார் விசாரணை.!

Posted by - April 24, 2021 0
சொலர்த்தூன் மாநிலத்தில் கடை ஒன்றில் மர்ம நபர்கள் செய்த செயல் – போலீசார் விசாரணை.! சுவிட்சர்லாந்தின் சொலர்த்தூன் மண்டலத்தில் சிற்றின்ப கடை ஒன்றில் மர்ம நபர்கள் அமிலம்…

ஆஸ்திரியாவின் முடக்கம் சுவிஸ் சுற்றுலாத்துறையில் சாதக நிலை

Posted by - November 24, 2021 0
ஆஸ்திரியாவின் முடக்கம் சுவிஸ் சுற்றுலாத்துறையில் சாதக நிலை- சுற்றுலாப் பயணிகள், சுவிட்சர்லாந்தின் ஸ்கை ரிசோர்ட்கள் நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். ஆஸ்திரியாவில் முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளதன் காரணமாக பெரும்…

மனைவியின் அழுகிய பிணத்துடன் சுவிற்சர்லாந்துக்குள் நுழைந்த நபர்..!!

Posted by - April 10, 2021 0
மனைவியின் அழுகிய பிணத்துடன் சுவிற்சர்லாந்துக்குள் நுழைந்த நபர்..!! ஸ்பெயினிலிருந்து பிரான்ஸ் வழியாக சுவிட்சர்லாந்துக்கு வர முயன்ற ஒரு கார், பொலிசாரைக் கண்டதும் தப்ப முயன்றுள்ளது. அந்த காரை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *