சுவிஸில் திடீரென போராட்டத்தில் குதித்த மக்கள்… ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்திய பொலிஸ்

44 0

சுவிஸில் திடீரென போராட்டத்தில் குதித்த மக்கள்… ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்திய பொலிஸ்

சுவிஸில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்த மக்களை கலைக்க பொலிசார் pepper spray மற்றும் ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்தியுள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் யூரி மண்டலத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சனிக்கிழமை Altdorf பகுதியில் சுமார் 500 பேர்கள் திரண்ட ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எவரும் மாஸ்க் அணிந்திருக்கவில்லை என்பது மட்டுமின்றி, சமூக இடைவெளியும் கடைபிடிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. பொதுவாக கொரோனா அச்சுறுத்தல் நீடிக்கும் நிலையில், அதிக கூட்டம் திரள வாய்ப்பில்லை என்றே பொலிசார் கருதியுள்ளனர்.

Tamil News, Lankasri News, Lankasri Tamil News, Swiss News, Protest, Arrest, சுவிஸில்

ஆனால், சுமார் 500 பேர்கள் திரண்டுள்ளது தங்களுக்கு வியப்பாக இருந்தது என பொலிஸ் தரப்பே தெரிவித்துள்ளது. மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அமைதியான முறையில் கலைந்து செல்ல யூரி மண்டல பொலிசார் கோரியுள்ளனர்.

ஆனால், பெரும்பாலானோர் கண்டுகொள்ளாத நிலையில், pepper spray மற்றும் ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி, நகரத்தில் இருந்து குறிப்பிட்ட காலத்திற்கு வெளியேறும் உத்தரவையும் 180 பேர்களுக்கு நகர நிர்வாகத்தால் அளிக்கப்பட்டுள்ளது.

நகரின் பல பகுதிகளில் இருந்தும் ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிசார் கைது செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Source:- Lankasri

Related Post

சுவிஸ்

சுவிஸ் சிறையிலிருந்து பயங்கர குற்றவாளி தப்பி ஓட்டம்

Posted by - April 20, 2021 0
சுவிஸ் சிறையிலிருந்து பயங்கர குற்றவாளி தப்பி ஓட்டம் பயங்கர குற்றவாளி என வர்ணிக்கப்பட்டுள்ள நபர் ஒருவர் சுவிஸ் சிறைச்சாலை ஒன்றிலிருந்து தப்பியோடிவிட்டார். பல நாடுகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த,…
swiss news

சுவிட்சர்லாந்தில் மருத்துவமனைகள் ஸ்தம்பிக்கலாம்: கடும் நடவடிக்கைகளுக்கு பரிந்துரை

Posted by - November 24, 2021 0
பெடரல் அரசின் கொரோனா பணிக்குழுவானது தயார் செய்துள்ள 23 பக்க அறிக்கையில் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில், டிசம்பர் மாதத்தில் சுவிட்சர்லாந்தின் மருத்துவமனைகள் ஸ்தம்பிக்கும் நிலை…
பிரான்சில்

பிரான்சில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட 8 வயது சிறுமி சுவிஸில் பத்திரமாக மீட்பு

Posted by - April 19, 2021 0
பிரான்சில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட 8 வயது சிறுமி சொந்த தாயாருடன் சுவிட்சர்லாந்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். சிறுமியை கடத்திய குற்றத்திற்காக தாயார் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மிக…
21 609fcd9f6cc30

சுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் காணாமல் போன செல்வந்தர் இறந்து விட்டதாக நீதிமன்றம் அறிவிப்பு

Posted by - May 16, 2021 0
சுவிட்ஸர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்போன செல்வந்தரான Karl-Erivan Haub உயிரிழந்து விட்டதாக ஜேர்மனிய நீதிமன்றம் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 58 வயதான Karl-Erivan…
Schwyz

பல ஆண்டுகளாக ஆயதங்கள் திருடி விற்ற நபர் சுவிற்சர்லாந்தில் கைது.!!

Posted by - April 24, 2021 0
பல ஆண்டுகளாக ஆயதங்கள் திருடி விற்ற நபர் சுவிற்சர்லாந்தில் கைது.!! சுவிட்சர்லாந்தில் பொலிசாருக்கான துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை திருட்டுத்தனமாக விற்று பல ஆண்டுகளாக சம்பாதித்த முன்னாள் அதிகாரி…