சுவிஸில், கல்வி நிறுவனங்கள், தொடர் வெடிகுண்டு, மிரட்டல்

சுவிஸில் கல்வி நிறுவனங்கள் மீது தொடர் வெடிகுண்டு மிரட்டல்

3 0

சுவிஸில் கல்வி நிறுவனங்கள் மீது தொடர் வெடிகுண்டு மிரட்டல்

சுவிஸில் கல்வி நிறுவனங்கள் மீது தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான நால்வருக்கு கடுமையான அபராதமும் சிறைவாசமும் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் சுமார் 20 சந்தேக நபர்களை விசாரித்ததாகவும், அதில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பில் நால்வரை கைது செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கைதுக்கு தொடர்புடைய மிரட்டல் சம்பவம் கடந்த ஆண்டு மார்ச் 12 மற்றும் 24ம் திகதிகளில் வாட் மண்டலத்தில் செயல்பட்டுவரும் சில முக்கிய கல்வி நிறுவனங்கள் மீது நடத்தப்பட்டது.

சுவிஸில் கல்வி
சுவிஸில் கல்வி

கைதான நால்வரில் இருவர் பெண்கள் எனவும், 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும், இதில் இருவர் சிலி மற்றும் குரோஷியா நாட்டவர்கள் எனவும் எஞ்சிய இருவரும் சுவிஸ் நாட்டவர்கள் எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி இவர்கள் நால்வரும் தொடர்புடைய கல்வி நிறுவனங்களில் படித்து வந்தவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது. வழக்கின் தன்மையை கருத்தில் கொண்டு இந்த நால்வரையும் மூன்று மாதங்களுக்கு முன் விசாரணை காவலில் வைக்குமாறு அரசு வழக்கறிஞர் கோரியுள்ளார்.

இலவசமாக Deutsch மொழி கற்கலாம் வாங்க | பகுதி-3 | SwissTamil24.Com

மேலும் இவர்களது தகவல்கள் குற்றவியல் பதிவேட்டில் பதிவதால் எதிர்காலம் மற்றும் தொழில் வாய்ப்புகளை அது பாதிக்கும் என தெரிய வந்துள்ளது.

கூடுதலாக, பொலிஸ் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் செலவுகளுக்காக ஒரு வழக்குக்கு 10,000 முதல் 15,000 பிராங்குகள் வரை செலுத்தும் கட்டாயத்துக்கு உள்ளாவார்கள்.

மட்டுமின்றி இந்த நால்வரும் இனி கல்வி நிறுவனங்களில் இருந்து விலக்கப்படுவார்கள், பெருந்தொகை அபராதம் செலுத்த நேரிடும், மட்டும்மின்றி சிறைவாசமும் அனுபவிக்கும் சூழல் ஏற்படும்.

Related Post

21 6194fcf87b8a2

சூரிச் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட பெண் பயணி: சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி

Posted by - November 17, 2021 0
சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தில் 73 வயதான பெண்மணி ஒருவரிடம் இருந்து கிலோ கணக்கில் கோகோயின் போதை மருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. சூரிச் விமான நிலையத்தில் திங்கட்கிழமை குறித்த…
21 61942be645899

சுவிட்சர்லாந்தில் விசா இல்லாமல் நுழைய அனுமதி! எந்த நாட்டினருக்கு தெரியுமா?

Posted by - November 17, 2021 0
ஜனவரி 2022 முதல் அவுஸ்திரேலியர்கள் விசா இல்லாமல் சுவிட்சர்லாந்திற்கு நுழையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிஸ் ஃபெடரல் கவுன்சில், அவுஸ்திரேலியப் பிரஜைகள் இங்கு வேலை செய்ய மற்றும் நீண்ட…
medium 2021 05 30 2447edae47

சுவிஸில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கிய 6 மாத குழந்தை

Posted by - May 31, 2021 0
சுவிட்சர்லாந்தின் Graubünden மண்டலத்தில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 52 வயதான நபர் மரணமடைந்துள்ளதுடன் பிஞ்சு குழந்தை ஒன்று காயங்களுடன் தப்பியுள்ளது. Graubünden மண்டலத்தில்…
சுவிஸ் பெர்ன்

சுவிஸ் பெர்ன் மண்டலத்தில் பற்றி எரிந்த வீடு – 6 பேர் மருத்துவமனையில்.!!

Posted by - April 18, 2021 0
சுவிஸ் பெர்ன் மண்டலத்தில் பற்றி எரிந்த வீடு – 6 பேர் மருத்துவமனையில்.!! சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் குடியிருப்பு ஒன்று தீ பிடித்து எரிந்ததில், தாயாரும் அவரது…
சுவிஸ் செய்திகள் இன்று,Swiss Tamil News,சுவிற்சர்லாந்து செய்திகள்,சுவிஸ் செய்திகள்

சுவிஸ் செய்திகள் இன்று – சுவிற்சர்லாந்து செய்திகள் (22.03.21) – Swiss Tamil News

Posted by - March 22, 2021 0
சுவிஸ் செய்திகள் இன்று – சுவிற்சர்லாந்து செய்திகள் (22.03.21) – Swiss Tamil News , சுவிற்சர்லாந்து செய்திகளை தமிழ் மொழியில் தமிழர்களுக்காக வழங்கி கொண்டிருக்கிறோம். சுவிற்சர்லாந்து…