21 609

சுவிஸில் ஊக்கத்தொகையாக அடிப்படை மாத வருவாயை பெறவிருக்கும் 500 பேர்

5 0

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் தெரிவு செய்யப்படும் 500 பேர் ஊக்கத்தொகையாக அடிப்படை மாத வருவாயை பெறவிருக்கின்றனர். சுவிஸ் மக்களுக்கு குறிப்பிட்ட ஒரு தொகையை அடிப்படை வருவாயாக வழங்கும் திட்டமானது எப்போது விவாத பொருளாகவே இருந்து வருகிறது.

சமீபத்தில், கடந்த 2016ல் அவ்வாறான ஒரு முயற்சி முன்னெடுக்கப்பட்டதில் சுமார் 75% சுவிஸ் மக்களால் குறித்த திட்டம் நிராகரிக்கப்பட்டது. ஆனால் சூரிச் நகரில் குறித்த திட்டத்திற்கு பெருவாரியான ஆதரவு இருந்தது. மாவட்டம் 4 மற்றும் 5-ல் சுமார் 54.7% மக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

சுவிஸில்

இந்த நிலையில் சூரிச் நகரம் தற்போதைய சூழலில் அந்த திட்டத்தை அமுலுக்கு கொண்டுவர முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பாக கடந்த 6 மாதங்களில் மட்டும் ஆதரவு தெரிவித்து சுமார் 4,000 பேர் கையொப்பங்கள் இட்டுள்ளனர்.

சூரிச் நகரில் குறைந்தது 500 பேர் மூன்று ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் அடிப்படை வருமானத்தைப் பெற வேண்டும் என்று இந்த திட்டத்தில் முன்வைக்கப்படுகிறது.

ஆனால் அந்த தொகை எவ்வளவு என்பது தொடர்பில் இதுவரை முடிவெடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி அடிப்படை வருவாய் பெறவிருக்கும் அந்த 500 பேர்களை எவ்வாறு தெரிவு செய்வார்கள் எனவும் தகவல் இல்லை.

ஆனால் மிக விரைவில் செயல்முறைக்கு கொண்டுவரப்படும் என்பது மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

21 61942be645899

சுவிட்சர்லாந்தில் விசா இல்லாமல் நுழைய அனுமதி! எந்த நாட்டினருக்கு தெரியுமா?

Posted by - November 17, 2021 0
ஜனவரி 2022 முதல் அவுஸ்திரேலியர்கள் விசா இல்லாமல் சுவிட்சர்லாந்திற்கு நுழையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிஸ் ஃபெடரல் கவுன்சில், அவுஸ்திரேலியப் பிரஜைகள் இங்கு வேலை செய்ய மற்றும் நீண்ட…
swiss pass latest news

327 இலங்கை தமிழர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்கிய சுவிட்ஸர்லாந்து அரசு

Posted by - November 24, 2021 0
சுவிட்ஸர்லாந்து அரசு, இலங்கை தமிழர்கள் 327 பேருக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை பாதுகாப்பு பிரிவு, பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும்…
கொடிய கொரோனா

இந்தியாவில் உருமாறிய கொடிய கொரோனா சுவிற்சர்லாந்தில் பரவல்..!!

Posted by - April 27, 2021 0
இந்தியாவில் உருமாறிய கொடிய கொரோனா சுவிற்சர்லாந்தில் பரவல்..!! இந்தியாவில் உருமாற்றம் கண்ட மிக ஆபத்தான கொரோனா தொற்று, சுவிட்சர்லாந்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. குறித்த தகவலை…
Lausanne

சுவிஸ் நாட்டில் லவுசான் மாநில தேர்தலில் போட்டியிட்ட இரு தமிழர்களும் வெற்றி

Posted by - March 17, 2021 0
சுவிஸ் நாட்டில் லவுசான் மாநில தேர்தலில் போட்டியிட்ட இரு தமிழர்களும் வெற்றிபெற்றுள்ளனர். சுவிஸ் நாட்டின் லவுசான் மாநிலத்தில் 07.03.2021 இடம்பெற்ற தேர்தலில் இரு வேறுகட்சிகளில் போட்டியிட்ட தமிழர்கள்…
Transparent-security-key-swiss

கண்ணுக்கு தெரியாத பூட்டு.!! சுவிட்சர்லாந்தில் ஒரு ஆச்சரிய கண்டுபிடிப்பு.!!

Posted by - March 20, 2021 0
சுவிட்சர்லாந்தில்,  ஒரு ஆச்சரிய கண்டுபிடிப்பு – கண்ணுக்கு தெரியாத பூட்டு.!! சுவிஸ் நிறுவனம் ஒன்று, கண்ணுக்குத்தெரியாத பூட்டு ஒன்றை கண்டுபிடித்துள்ளது. பிளாஸ்டிக் பேப்பர் போல காணப்படும் இந்த…