சுவிற்சர்லாந்து உணவகங்கள்

மீண்டும் இழுத்து மூடப்படும் சுவிற்சர்லாந்து உணவகங்கள் – அரசு அறிவிப்பு

1 0

மீண்டும் இழுத்து மூடப்படும் சுவிற்சர்லாந்து உணவகங்கள் – அரசு அறிவிப்பு – சுவிட்சர்லாந்தில் அமுலில் இருக்கும் பகுதி நேர பொதுமுடக்கம் நெகிழ்த்தப்படுமா அல்லது கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து இன்று விவாதிக்கப்பட்டதில் உணவகங்கள் குறித்த விபரம் வெளியாகியுள்ளது. சுவிஸ் பெடரல் கவுன்சில் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

அரசைப் பொருத்தவரையில் இது ஒரு கடினமான முடிவு. அமைச்சர்களுக்கோ எல்லா பக்கங்களில் இருந்தும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படவேண்டும் என்று கோருவோர், கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவதையும், கொரோனா வைரஸ் பன்மடங்கு வேகத்தில் பரவிவருவதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இதற்கிடையில் தற்போதிருக்கும் பரிசோதனைகளால் கண்டுபிடிக்க இயலாத ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது வேறு அச்சத்தை அதிகரித்துள்ளது.

சுவிற்சர்லாந்து,உணவகங்கள்

 

ஆனால், மறு பக்கம் பார்த்தால், மீண்டும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படுமானால், அது பொருளாதாரத்தை பயங்கரமாக பாதிக்கும்.

மக்களோ வீடுகளில் அடைந்து கிடந்து மனதளவில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆக, இன்றைய தினம் பெடரல் கவுன்சில் அறிவிப்பின் படி உணவகங்கள் மற்றும் விடுதிகள் என்பன தொடர்ந்தும் இந்த மாத இறுதி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் பலரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த மாதம் ஆவது முடிவுக்கு வரும் என எண்ணியிருந்த மக்களுக்கு இது பலத்த ஏமாற்றத்தையும் உணவு விடுதி உரிமையாளர்களுக்கு மிகுந்த வருத்தத்தையும் இச் செய்தி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

21 60761481cdd75

நாளை முதல் இவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம்: சுவிஸ் சுகாதாரத் துறை

Posted by - April 15, 2021 0
நாளை முதல் இவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம்: சுவிஸ் சுகாதாரத் துறை – சூரிச்சில் எஃப், ஜி மற்றும் ஓ குழுக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வெள்ளிக்கிழமை முதல்…
சுவிஸ் வின்டர்தூர்

சுவிஸ் வின்டர்தூர் நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கோர விபத்து – ஒருவர் பலி.!!

Posted by - March 22, 2021 0
சுவிஸ் வின்டர்தூர் நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கோர விபத்து – ஒருவர் பலி.!! சூரிச் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ட்ரக் வாகனம் ஒன்று இன்று திங்கள் கிழமை அதிகாலை 5:45…
186433443 313199466985505 3418441560723949888 n

சுவிசில் மூன்று நகரங்களில் ஆரம்பமான நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப் பயணம்!

Posted by - May 16, 2021 0
நாள் 01 (14.05.2021) நேற்றைய தினம் (14.05.2021) காலை பாசல், செங்காளன், கிளாறூஸ் ஆகிய மாநிலங்களிலிருந்து தமிழீழ விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்த மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்குமாக அகவணக்கத்துடனும், உறுதிமொழியுடனும்…
சுவிஸில்

சுவிஸில் மாயமான இளம்பெண்… சகோதரி கூறும் அதிர்ச்சி பின்னணி

Posted by - May 15, 2021 0
சுவிட்சர்லாந்தில் இரட்டையர்களில் ஒருவரான 21 வயது இளம்பெண் மாயமான நிலையில், அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என சகோதரி சந்தேகம் தெரிவித்துள்ளார். லூசர்ன் மண்டலத்தில் Adligenswil பகுதியை சேர்ந்த 21…
21 61942be645899

சுவிட்சர்லாந்தில் விசா இல்லாமல் நுழைய அனுமதி! எந்த நாட்டினருக்கு தெரியுமா?

Posted by - November 17, 2021 0
ஜனவரி 2022 முதல் அவுஸ்திரேலியர்கள் விசா இல்லாமல் சுவிட்சர்லாந்திற்கு நுழையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிஸ் ஃபெடரல் கவுன்சில், அவுஸ்திரேலியப் பிரஜைகள் இங்கு வேலை செய்ய மற்றும் நீண்ட…