சுவிஸ் செய்திகள்

வீட்டிற்குள் முடங்கப்போகும் சுவிற்சர்லாந்து மக்கள் – மீண்டும் வெளியான தகவல்

2 0

வீட்டிற்குள் முடங்கப்போகும் சுவிற்சர்லாந்து மக்கள் – மீண்டும் வெளியான தகவல் – சுவிற்சர்லாந்தில் அதிகரித்த கொரோனா காரணமாக கடந்த டிசம்பர் 22 திகதி முதல் உணவு விடுதிகள் உணவகங்கள் இழுத்து மூடப்பட்டு லாக் டவுண் அறிவிக்கப்பட்டது.

2 மாதங்களுக்கு மேல் ஆகியும் கொரோனாவின் பாதிப்பு முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வாராத காரணத்தினால் எப்போது உணவங்களை திறப்பது என்பது பலரது கேள்வியாக இருந்தது. உணவக உரிமையாளர்கள் தங்களது வருமானம் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்து வரும் நிலையில் இந்த மாதம திறக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மார்ச் மாதம் 22ம் திகதி அளவில் உணவகங்கள் திறக்கப்படலாம் என பெடரல் கவுன்சில் எதிர்வு கூறியிருந்த நிலையில் பல்கனி அல்லது தெராச மட்டுமே திறக்கப்பட்டு உணவகங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இதனை விடவும் மேலதிக தொழில்களுக்கு செல்பவர்களுக்கு மீண்டும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

மார்ச் 22 இலிருந்தாவது வாழ்க்கை சகஜ நிலைக்கு திரும்பிவிடும் என சுவிஸ் மக்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில், தற்போது வீட்டிலிருந்தவண்ணம் வேலை பார்ப்பது கட்டாயம் என்ற விதி நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முடங்கப்போகும் சுவிற்சர்லாந்து மக்கள்

சுவிஸ் அரசு, மக்கள் வேலைக்குத் திரும்புவதை இன்னும் கொஞ்சம் நீட்டிக்க விரும்புவதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது. வீட்டிலிருந்து வேலை செய்வதால் மக்கள் சலிப்படைந்துள்ளதாகவும், அவர்கள் வேலைக்கு திரும்ப ஆர்வம் காட்டுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டில் சுமார் 44 சதவிகிதத்தினர் வாரத்தில் சில நாட்களாவது வீட்டிலிருந்தே பணி செய்ததாக அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், மற்றவர்களுடன் பழக இயலாததால் மக்கள் வருத்தமுற்றுள்ளதாக தெரிகிறது. இருந்தாலும், வீட்டிலிருந்தே வேலை பார்ப்பது கட்டாயம் என்னும் விதி ஏப்ரல் வரையிலாவது நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Post

geneva

ஜெனீவா ஏரியில் மிதந்த ஆணின் சடலம்

Posted by - May 14, 2021 0
ஜெனீவா ஏரியில் மிதந்த ஆணின் சடலம் ஒன்றை வாட் மண்டல பொலிசார் வியாழக்கிழமை பகல் மீட்டுள்ளனர். குறித்த சடலமானது ரோல் துறைமுகத்திற்கு அருகில் மிதந்துள்ளது. இதனைக் காண…
தடுப்பூசி

தடுப்பூசி போட மறுத்தால் வெளியேற்றப்படுவீர்கள்… சுவிஸ் அதிரடி தகவல்

Posted by - April 22, 2021 0
தடுப்பூசி போட மறுத்தால் வெளியேற்றப்படுவீர்கள்… சுவிஸ் அதிரடி தகவல் சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பவர்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என ஃபெடரல் கவுன்சில் அறிவித்துள்ளது. சிலர் இதை…
சுவிற்சர்லாந்தில்,கொரேனா தடுப்பூசி

சுவிற்சர்லாந்தில் அடுத்தடுத்து 21 பேர் மரணம் – கொரேனா தடுப்பூசியின் கோரம்.!!

Posted by - March 12, 2021 0
சுவிற்சர்லாந்தில் அடுத்தடுத்து 21 பேர் மரணம் – கொரேனா தடுப்பூசியின் கோரம்.!! கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல்வேறு நாடுகளில் இன்று ஏற்றப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் கொரோனா தடுப்பூசி…
பிரான்சில்

பிரான்சில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட 8 வயது சிறுமி சுவிஸில் பத்திரமாக மீட்பு

Posted by - April 19, 2021 0
பிரான்சில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட 8 வயது சிறுமி சொந்த தாயாருடன் சுவிட்சர்லாந்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். சிறுமியை கடத்திய குற்றத்திற்காக தாயார் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மிக…

சுவிட்சர்லாந்தில் அதிகரித்த மக்கள் தொகை : வெளியான காரணம்

Posted by - April 8, 2021 0
சுவிட்சர்லாந்தில் அதிகரித்த மக்கள் தொகை : வெளியான காரணம்.! சுவிஸில் சுமார் 12% இறப்பு எண்ணிக்கை பதிவான நிலையிலும், மக்கள் தொகையில் உயர்வு பதிவாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.…