சுவிட்சர்லாந்தில்

சுவிட்சர்லாந்தில் பதிவாகிய 47 படுகொலை சம்பவங்கள் : அதிகாரிகள் எச்சரிக்கை.!

3 0

சுவிட்சர்லாந்தில் பதிவாகிய 47 படுகொலை சம்பவங்கள் : அதிகாரிகள் எச்சரிக்கை.! சுவிட்சர்லாந்தில் கடந்த 2019ம் ஆண்டை ஒப்பிடுகையில் கடுமையான குற்றங்கள் 2020ல் 9% அளவுக்கு அதிகரித்துள்ளதாக பெடரல் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இணைய குற்றங்களையும் தற்போது கருத்தில் கொண்டு, அதையும் பதிவு செய்ய சுவிஸ் பெடரல் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

2020ல் மட்டும் அதிக எண்ணிக்கையிலான இணையவழி குற்றங்கள் நடந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மட்டுமின்றி, வீடு புகுந்து கொள்ளைச் சம்பவங்கள் 32,819 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 2019ஐ விட 9.9 சதவீதம் அதிகமாகும்.

இருப்பினும் 2012ல் இருந்தே படிப்படியாக வீடு புகுந்து கொள்ளைச்சம்பவங்கள் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே e-bike திருட்டு சம்பவங்கள் சுமார் 37.5% அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

Tamil News, swisstamil24, Lankasri Tamil News, Swiss News, Crime

நம்பிக்கை அளிக்கும் வகையில், குடும்ப வன்முறைக் குற்றங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எதுவும் இல்லை என தெரிய வந்துள்ளது. இருப்பினும், குடும்ப வன்முறை தொடர்பில், பொலிசாருக்கு த்கவல் அளிக்கப்பட்டு, அது புகாராக பதிவானது மட்டுமே புள்ளிவிவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2020ல் கடுமையான குற்றங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை 1668 என தெரிய வந்துள்ளது. இது 2019ஐ ஒப்பிடுகையில் 9 சதவிகிதம் அதிகம் என பெடரல் அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2020ல் மட்டும் 47 படுகொலை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post

சுவிட்சர்லாந்து விசா,சுவிஸ் செய்திகள்,சுவிஸில் புர்காவை,சுவிட்சர்லாந்து

சுவிஸில் புர்காவை அடுத்து இனி இதற்கு தடை வரலாம் : வெளியான புதிய தகவல்

Posted by - March 9, 2021 0
சுவிஸில் புர்காவை அடுத்து இனி இதற்கு தடை வரலாம் : வெளியான புதிய தகவல் – சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய பெண்கள் பொதுவெளியில் புர்கா எனப்படும் முகம் மறைக்கும்…
சுவிஸில், கல்வி நிறுவனங்கள், தொடர் வெடிகுண்டு, மிரட்டல்

சுவிஸில் கல்வி நிறுவனங்கள் மீது தொடர் வெடிகுண்டு மிரட்டல்

Posted by - March 30, 2021 0
சுவிஸில் கல்வி நிறுவனங்கள் மீது தொடர் வெடிகுண்டு மிரட்டல் சுவிஸில் கல்வி நிறுவனங்கள் மீது தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான நால்வருக்கு கடுமையான அபராதமும்…
எல்லை மீறிய செக்ஸ்

எல்லை மீறிய செக்ஸ் – மருத்துவரின் விளையாட்டால் பெண் மரணம்

Posted by - March 18, 2021 0
எல்லை மீறிய செக்ஸ் – பெண் மரணம் – மருத்துவர் விடுதலை, எல்லை மீறிய செக்ஸ் – மருத்துவரின் விளையாட்டால் பெண் மரணம் – கவனக்குறைவால் ஏற்பட்ட…
swiss-police-in-zurich

சூரிச் நகரில் புகுந்த ஆயுதம் தாங்கிய போலீசார் : அலறித்துடித்த மக்கள்

Posted by - March 22, 2021 0
சூரிச் நகரில் புகுந்த ஆயுதம் தாங்கிய போலீசார் : அலறித்துடித்த மக்கள் – சுவிட்சர்லாந்தில், திடீரென ஆயுதம் தாங்கிய பொலிசார் ரயிலில் திபுதிபுவென நுழைய, பயணிகள் சிலர்…
எத்தியோப்பியாவிலிருந்து

எத்தியோப்பியாவிலிருந்து வெளியேறுமாறு சுவிஸ் பிரஜைகளுக்கு அறிவுறுத்தல்

Posted by - November 24, 2021 0
எத்தியோப்பியாவிலிருந்து வெளியேறுமாறு தமது நாட்டுப் பிரஜைகளுக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவின் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து செல்வதாக சுட்டிக்காட்டியுள்ளது. எந்தவொரு…