சுவிஸ் செய்திகள்

சுவிட்சர்லாந்தில் கோவிட் தொற்று அதிகரிப்பு குறித்து அதிகாரபூர்வமாக எச்சரிக்கை

9 0

சுவிட்சர்லாந்தில் கோவிட் தொற்று அதிகரிப்பு குறித்து அதிகாரபூர்வமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும் எனவும் தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ள வேண்டுமெனவும் சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

சுவிஸ் வைத்தியசாலைகளில் நோய்த் தொற்று உறுதியாளர்கள் நிரம்புவதனை தவிர்ப்பதற்கு தடுப்பூசி ஏற்றிக் கொள்வது அவசியமானது என தெரிவித்துள்ளனர்.

நாட்டின் கோவிட் நிலைமைகள் மோசமடைந்து செல்வதாகவும் எதிர்வரும் வாரங்களில் இந்த நிலை மேலும் உக்கிரமடையும் எனவும் மத்திய சுகாதார அலுவலகத்தின் உயர் அதிகாரி பெற்ரிக் மாத்தியாஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ், சுவிட்சர்லாந்தில்

சுவிட்சர்லாந்தில் 10 முதல் 19 வயது வரையிலானவர்களே அதிகளவில் நோய்த் தொற்றுக்கு இலக்காகி வருகின்றனர்.

80 மற்றும் அதனிலும் கூடுதல் வயதுகளை உடையவர்களே கோவிட் காரணமாக அதிகளவில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனர் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஏழு நாட்களில் கோவிட் தொற்றுக் காரணமாக நாள் ஒன்றில் பதிவான சராசரி தொகை 5587 ஆக காணப்படுகின்றது.

கடந்த ஒக்ரோபர் மாத நடுப்பகுதியிலிருந்து புதிய கோவிட் அலையொன்று உருவாகியுள்ளது.

நாட்டில் 65 வீதமான மக்கள் முழு அளவில் தடுப்பூசி ஏற்றிக் கொண்டுள்ளதுடன், 65 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வாரங்களில் சுவிட்சர்லாந்தில் கோவிட் வைத்தியசாலை அனுமதிகள் அதிகரிக்கும் எனவும், மூன்று வாரங்களுக்கு முன்னதாக ஆஸ்திரியாவில் நிலவிய நிலைமை தற்பொழுது சுவிட்சர்லாந்தில் காணப்படுவதாகவும் அரசாங்க கோவிட் விஞ்ஞான செயலணியின் தலைவர் தான்ஸா ஸ்டாட்லர் தெரிவித்துள்ளார்.

Related Post

Anil ampaani

அனில் அம்பானியின் சுவிஸ் வங்கிக்கணக்கு விவரங்களை வெளியிடவேண்டும்…

Posted by - May 14, 2021 0
ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானியின் சுவிஸ் வங்கிக்கணக்கு விவரங்களை வெளியிடுமாறு சுவிஸ் வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி மற்றும்…
zurich nakai kadai

சூரிச் நகைக் கடைகளில் புகுந்து மில்லியன் கணக்கில் கொள்ளை.!!

Posted by - March 30, 2021 0
சூரிச் நகைக் கடைகளில் புகுந்து மில்லியன் கணக்கில் கொள்ளை.!! சுவிட்சர்லாந்தில் நகைக் கடைகளில் புகுந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட செர்பிய இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.…
கோவிட்

கோவிட் விதிகளை கடுமையாக்க வேண்டிய அவசியம் இல்லை – சுவிஸ் அரசாங்கம்

Posted by - November 25, 2021 0
கோவிட் விதிகளை கடுமையாக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சுவிஸ் அரசாங்கம் கூறியுள்ளது. சுவிட்சர்லாந்தில் கோவிட் நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ள போதிலும், புதிய நாடு தழுவிய கோவிட் கட்டுப்பாடு…
21 6194fcf87b8a2

சூரிச் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட பெண் பயணி: சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி

Posted by - November 17, 2021 0
சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தில் 73 வயதான பெண்மணி ஒருவரிடம் இருந்து கிலோ கணக்கில் கோகோயின் போதை மருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. சூரிச் விமான நிலையத்தில் திங்கட்கிழமை குறித்த…
ஆர்காவ்,மண்டலத்தில்,கைது

குடும்ப வன்முறை தொடர்பாக ஆர்காவ் மண்டலத்தில் ஒருவர் கைது

Posted by - March 15, 2021 0
குடும்ப வன்முறை தொடர்பாக ஆர்காவ் மண்டலத்தில் ஒருவர் கைது – சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மண்டலத்தில் குடும்ப வன்முறை தொடர்பாக 46 வயது நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.…