சிரியாவில்

சிரியாவில் முகாமில் சிக்கிய சுவிற்சர்லாந்து சிறுமிகள் – ஐ.நா விடுத்த வேண்டுகோள்.!!

6 0

சிரியாவில் முகாமில் சிக்கிய சுவிற்சர்லாந்து சிறுமிகள் – ஐ.நா விடுத்த வேண்டுகோள்.!!

சிரியாவில் தற்காலிக முகாம் ஒன்றில் தங்கியிருக்கும் இரண்டு சுவிஸ் சிறுமிகளை சுவிட்சர்லாந்துக்கு அழைத்துக்கொள்ளுமாறு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பு சுவிட்சர்லாந்தை வலியுறுத்தியுள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன், தங்கள் தாயால் சிரியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட 8 மற்றும் 14 வயதுடைய இரண்டு சகோதரிகளை சுவிட்சர்லாந்துக்கு திருப்பி அழைத்துக்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் நிபுணர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிரியாவில்
சிரியாவில்

சுற்றுலா என்ற பெயரில் அந்த பெண் தன் மகள்களை சிரியாவுக்கு அழைத்துச் சென்றிருந்த நிலையில், அவர்கள் ஐ எஸ் அமைப்பிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.

தீவிரவாதக் குழுக்கள் என்று அழைக்கப்படும் அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நபர்களுக்கு பிறந்ததால் மட்டுமே, பிள்ளைகள் அதன் விளைவுகளை சுமக்கக்கூடாது என அந்த நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.

சிரியாவில்

முகாம்களில் வாழ்ந்ததால் தங்கள் சுதந்திரம் பறிக்கப்பட்ட நிலையில், சுவிட்சர்லாந்துக்கு திரும்பி தங்கள் குடும்பத்தினருடன் இணையும் உரிமையும் மறுக்கப்பட்டு, அனைத்து வகையிலும் துஷ்பிரயோகம் செய்யப்படும் அபாயத்தில் அந்த சிறுமிகள் வாழ்ந்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

பல ஆண்டுகளாக ஆயதங்கள் திருடி விற்ற நபர் சுவிற்சர்லாந்தில் கைது.!!

அத்துடன், அந்த சிறுமிகளில் மூத்தவளுக்கு காலில் குண்டு துகள்கள் பாய்ந்துள்ளதால் மூன்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட வேண்டிய அவசியமும் உள்ளது.

அத்துடன், சுகாதாரமற்ற நிலையில், பாதுகாப்பும் சரியாக இல்லாத ஒரு அபாயகரமான ஒரு சூழலில் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்றும் அந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Source

Related Post

Schwyz

பல ஆண்டுகளாக ஆயதங்கள் திருடி விற்ற நபர் சுவிற்சர்லாந்தில் கைது.!!

Posted by - April 24, 2021 0
பல ஆண்டுகளாக ஆயதங்கள் திருடி விற்ற நபர் சுவிற்சர்லாந்தில் கைது.!! சுவிட்சர்லாந்தில் பொலிசாருக்கான துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை திருட்டுத்தனமாக விற்று பல ஆண்டுகளாக சம்பாதித்த முன்னாள் அதிகாரி…
சுவிஸ் செய்திகள்

சுவிட்சர்லாந்தில் கோவிட் தொற்று அதிகரிப்பு குறித்து அதிகாரபூர்வமாக எச்சரிக்கை

Posted by - November 25, 2021 0
சுவிட்சர்லாந்தில் கோவிட் தொற்று அதிகரிப்பு குறித்து அதிகாரபூர்வமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும் எனவும் தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ள வேண்டுமெனவும் சுகாதார நிபுணர்கள்…
சென்ட்காலன் மாநிலம்

சென்ட்காலன் மாநிலம் Jonschwil பகுதியில் வீடு முற்றாக எரிந்து சேதம்.!!

Posted by - April 21, 2021 0
சென்ட்காலன் மாநிலம் Jonschwil பகுதியில் வீடு முற்றாக எரிந்து சேதம்.!! புதன்கிழமை, அதிகாலை 1:20 மணிக்குப் பிறகு,  Lütisburgerstrasse in Jonschwil SG ல் ஒரு ஒற்றை…
21 6098248a88a9c

சுவிற்சர்லாந்தில் சிறப்பாக இடம்பெற்ற 2021ம் ஆண்டிற்கான தமிழ்மொழி பொதுத்தேர்வு

Posted by - May 12, 2021 0
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 27 ஆவது பொதுத்தேர்வு இன்று நடைபெற்றுள்ளது. குறித்த பொதுத்தேர்வு நாடு தழுவிய ரீதியில் 63 தேர்வு நிலையங்களில்…
medium 2021 05 30 2447edae47

சுவிஸில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கிய 6 மாத குழந்தை

Posted by - May 31, 2021 0
சுவிட்சர்லாந்தின் Graubünden மண்டலத்தில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 52 வயதான நபர் மரணமடைந்துள்ளதுடன் பிஞ்சு குழந்தை ஒன்று காயங்களுடன் தப்பியுள்ளது. Graubünden மண்டலத்தில்…