சுவிற்சர்லாந்தில்,கொரேனா தடுப்பூசி

கோவிட் தடுப்பூசி தொடர்பில் சுவிஸ் வாழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

1 0

சுவிற்சர்லாந்து நாட்டில் வாழும் மக்கள் கோவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் அவர்களிடம் செல்லுபடியான மருத்துவக் காப்புறுதி பத்திரமும், வதிவிட அனுமதிப்பத்திரமும் இருத்தல் வேண்டும் .

இவை இரண்டும் இல்லாதவர்கள் தடுப்பூசியினைப் பெற்றுக்கொள்ள முடியாது.

பேர்ண் மாவட்டத்தில் பேர்ண் மேற்குப்பகுதியில் இயங்கும் சமூக சேவையாளர் அலுவலகத்திற்கு வெளிநாட்டவர்கள் பலர் (இலங்கை நாட்டு மக்கள் உட்பட) தங்களிடம் செல்லுபடியான வதிவிட அனுமதிப்பத்திரமோ மருத்துவக்காப்புறுதி பத்திரமோ இல்லை என தெரிவித்துள்ளதுடன், தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கு உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசி

இவர்களின் இக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மார்கழி மாதம் 2021 முதலாவது தடுப்பூசியும், 2022 தை மாதம் இரண்டாவது தடுப்பூசியும் போடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சுவிற்சர்லாந்து நாட்டில் ஏதிலியாக (அகதியாக) தஞ்சம் கோரியவர்கள் பலரிடம் இவ்விரு அனுமதிப்பத்திரங்களும் இல்லை.

இவர்கள் அனைவரும் பேர்ண் மேற்குப்பகுதியில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். எந்த மாவட்டத்தில் வாழ்ந்தாலும் இத் தடுப்பூசிகளை பேர்ண் மேற்குப் பகுதியில் பெற்றுக்கொள்ள முடியும்.

பேர்ண் மேற்குப்பகுதியில் சமூக சேவையாளராகக் கடமையாற்றும் இணையரை தொடர்புகளை மேற்கொண்டு உங்கள் வரவுகளைப் பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புகளுக்கு: 079 397 38 77

முதலாவது தடுப்பூசி 10.12.2021 – 11.12.2021

இரண்டாவது தடுப்பூசி 07.01.2022 – 08.0120.22

இடம்: Im Quartierzentrum im Tscharnergut, Waldmannstrasse 17a, 3027 Bern.

Related Post

சுவிற்சர்லாந்தில்

சுவிற்சர்லாந்தில் மாயமாக மறைந்த தண்ணீர் – அதிர்ச்சியில் அதிகாரிகள்

Posted by - March 30, 2021 0
சுவிற்சர்லாந்தில் மாயமாக மறைந்த தண்ணீர் – அதிர்ச்சியில் அதிகாரிகள் சினிமா ஒன்றில், ஒருவர் தன் கிணற்றைக் காணவில்லை என அதிகாரிகளிடம் புகாரளிப்பார்… அதிகாரிகள் மண்டையை சொறிந்துகொள்வார்கள். அதேபோல்…
21 60761481cdd75

நாளை முதல் இவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம்: சுவிஸ் சுகாதாரத் துறை

Posted by - April 15, 2021 0
நாளை முதல் இவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம்: சுவிஸ் சுகாதாரத் துறை – சூரிச்சில் எஃப், ஜி மற்றும் ஓ குழுக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வெள்ளிக்கிழமை முதல்…
swiss resturant, swiss hotel, swiss news in tamil

சுவிற்சர்லாந்தில் உணவங்கள் எப்போது திறக்கப்படும் – வெளியான அறிவிப்பு.!

Posted by - March 12, 2021 0
சுவிற்சர்லாந்தில் அதிகரித்த கொரோனா காரணமாக கடந்த டிசம்பர் 22 திகதி முதல் உணவு விடுதிகள் உணவகங்கள் இழுத்து மூடப்பட்டு லாக் டவுண் அறிவிக்கப்பட்டது.
சுவிட்சர்லாந்தில் குடியுரிமை

சுவிட்சர்லாந்தில் குடியுரிமை கோருவதற்கான தேர்வில் கேட்கப்படும் சில வித்தியாசமான கேள்விகள்

Posted by - November 24, 2021 0
சுவிஸ் குடிமகனாக ஆக விரும்பும் அனைவரும், அதற்காக சுவிஸ் குடியுரிமைத் தேர்வு (citizenship exam) ஒன்றை எழுதி தேர்ச்சி பெறவேண்டும். அப்படி குடியுரிமைத் தேர்வில் கேட்கப்பட்டும் சில…

மியான்மர் இராணுவ ஆட்சிக்குழு மீது கடும் நடவடிக்கை எடுத்த சுவிஸ்

Posted by - April 3, 2021 0
மியான்மர் இராணுவ ஆட்சிக்குழு மீது கடும் நடவடிக்கை எடுத்த சுவிஸ் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியாவைத் தொடர்ந்து, மியான்மரில் நடந்த ஆட்சிக்கவிழ்ப்பிற்கு காரணமானவர்கள் எனக் கருதப்படும்…