கொரோனா-தடுப்பூசிக்கு

ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ள சுவிட்சர்லாந்து

4 0

ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ள சுவிட்சர்லாந்து – நேற்று சுவிட்சர்லாந்து ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், அதனால் சுவிட்சர்லாந்தின் தடுப்பூசி போடும் திட்டம் வேகமடையப்போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே சுவிட்சர்லாந்தில் மொடெர்னா மற்றும் பைசர் தடுப்புசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், தற்போது மூன்றாவதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா-தடுப்பூசிக்கு

ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசியின் சிறப்பம்சங்கள் என்னவென்றால், அது ஏற்கனவே சுவிட்சர்லாந்தில் பயன்பாட்டிலிருக்கும் தடுப்பூசிகளைவிட விலை குறைவு, அதை ப்ரீசரில் வைக்கவேண்டியதில்லை மற்றும் இரண்டு டோஸாக போடப்படாமல் ஒரே டோஸ் தடுப்பூசி போட்டாலே போதும்.

தடுப்பூசி திட்டம் மிகவும் மெதுவாக நடைபெறும் சுவிட்சர்லாந்தில் மூன்றாவதாக ஒரு தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைத்திருக்கும் நிலைமையிலும், தடுப்பூசி போடும் திட்டத்தின் வேகம் அதிகரிக்கப்போவதில்லை என்று கூறப்படுகிறது.

இலவசமாக Deutsch மொழி கற்கலாம் வாங்க

காரணம், சுவிட்சர்லாந்துக்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி வழங்குவதற்காக, அரசு இன்னமும் அந்நிறுவனத்துடனான ஒப்பந்தம் எதிலும் கையெழுத்திடவில்லை என்பதுதான்.

அது சரியான நேரத்தில் கையெழுத்தாகி அதற்குப் பின்புதான் ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசி சுவிட்சர்லாந்துக்கு வந்து சேரும்.

ஆகவே, இப்போது ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு சுவிட்சர்லாந்து ஒப்புதல் அளித்தாலும், தடுப்பூசி போடும் திட்டம் என்னவோ வேகமடையப்போவதில்லை!

Related Post

சுவிஸ் நதியில்

சுவிஸ் நதியில் செத்து மிதந்த மீன்கள்… நதிக்குள் தண்ணீரை பாய்ச்சும் தீயணைப்பு வீரர்கள்

Posted by - April 21, 2021 0
சுவிஸ் நதியில் செத்து மிதந்த மீன்கள்… நதிக்குள் தண்ணீரை பாய்ச்சும் தீயணைப்பு வீரர்கள் ஜெனீவா தீயணைப்பு வீரர்கள், மின் மோட்டார் மூலம் நதி ஒன்றிற்குள் தண்ணீரை பம்ப்…
கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் : சுவிட்சர்லாந்தில் நிலைமை – நடந்தவை முதல் நடப்பவை வரை..

Posted by - November 24, 2021 0
கொரோனா வைரஸ்: சுவிட்சர்லாந்தில் நிலைமை – நடந்தவை முதல் நடப்பவை வரை.. அக்டோபர் நடுப்பகுதியில் இருந்து புதிய கோவிட் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. நவம்பர் 24…
186433443 313199466985505 3418441560723949888 n

சுவிசில் மூன்று நகரங்களில் ஆரம்பமான நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப் பயணம்!

Posted by - May 16, 2021 0
நாள் 01 (14.05.2021) நேற்றைய தினம் (14.05.2021) காலை பாசல், செங்காளன், கிளாறூஸ் ஆகிய மாநிலங்களிலிருந்து தமிழீழ விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்த மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்குமாக அகவணக்கத்துடனும், உறுதிமொழியுடனும்…
Swiss tamil today News

சுவிற்சர்லாந்தில் நடைமுறைக்கு வரும் புதிய தளர்வுகள்! – அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு

Posted by - April 15, 2021 0
சுவிற்சர்லாந்தில் நடைமுறைக்கு வரும் புதிய தளர்வுகள்! – அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு சுவிற்சர்லாந்து அரசு தனது புதிய மகுடநுண்ணி தளர்வினை அறிவித்துள்ளது. இதன்படி 19.04.2021 முதல் இப்புதுத்…