21 6085ed7900c38

கொரோனாவால் 3 மில்லியன் மக்கள் பாதிப்பு : உறுதிப்படுத்திய சுவிஸ் அரசாங்கம்

61 0

சுவிட்சர்லாந்தில் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் மக்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் மூன்றில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் பெரும்பாலானோருக்கு அது தெரிந்திருக்கவில்லை எனவும் அரசு தரப்பு மதிப்பிட்டுள்ளது.

கொரோனா பரவல் தொடங்கிய நாள் முதல் கிட்டத்தட்ட மூன்றில் ஒருபங்கு சுவிஸ் மக்கள் பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர். இந்த 2.8 மில்லியன் மக்களில் வெறும் 650,000 பேர்கள் மட்டுமே, வெளிப்படையான அறிகுறிகளால் உரிய சோதனைக்கு உட்பட்டுள்ளனர்.

துளசி திருமண சேவை,சுவிற்சர்லாந்தில் இருந்து உலகம் எங்கும்
துளசி திருமண சேவை – சுவிற்சர்லாந்தில் இருந்து உலகம் எங்கும்

இந்த மக்கள் கொரோனா நோயிலிருந்து மீண்டதாக அரசு உறுதி செய்துள்ள நிலையில், இவர்கள், தடுப்பூசி போடாவிட்டாலும் கொரோனாவுக்கான சான்றிதழைப் பெறுவார்கள் என சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியாவில் உருமாறிய கொடிய கொரோனா சுவிற்சர்லாந்தில் பரவல்..!!

குறித்த கொரோனா சான்றிதழைப் பெற்றுக் கொண்டவர்கள் கோடை காலம் முதல் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், கொரோனா பாதித்திருப்பது அடையாளம் காணப்படாத அந்த இரண்டு மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள், நோயில் இருந்து மீண்டு வந்ததாக கருதப்படமாட்டார்கள்.

கொரோனாவால்
கொரோனாவால் 3 மில்லியன் மக்கள் பாதிப்பு : உறுதிப்படுத்திய சுவிஸ் அரசாங்கம்

அவர்களுக்கு ஆன்டிபாடி சோதனைகள் மூலம் தொற்றுநோயை மறு ஆய்வு செய்யப்படும். மேலும் சுவிட்சர்லாந்தை பொருத்தமட்டில் ஏழ்மை நிலையில் இருப்பவர்களே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதும், இறந்ததும் என்பதும் தெரிய வந்துள்ளது.

ஏழ்மை நிலையில் உள்ள பகுதிகளில் 100,000 பேர்களில் 29 பேர் மிக ஆபத்தான சூழலில் அவசர சிகிச்சை பிரிவை நாடியுள்ளனர். ஆனால் செல்வந்தர்கள் மிகுந்த பகுதியில் 100,000 பேர்களில் 13 பேர் மட்டுமே அவசர சிகிச்சை பிரிவை நாடியுள்ளதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Related Post

சுவிட்சர்லாந்திலிருந்து பிரான்சுக்குள் யாரெல்லாம் உட் செல்லமுடியும் : புதிய தகவல்.!!

Posted by - April 8, 2021 0
சுவிட்சர்லாந்திலிருந்து பிரான்சுக்குள் யாரெல்லாம் உட் செல்லமுடியும் : புதிய தகவல்.!! பிரான்சில் கொரோனா பரவலைத் தடுப்கும் வகையில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், எல்லை தாண்டி…
21 60a0f2a1b5b27

சுவிஸில் தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின்னரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்

Posted by - May 16, 2021 0
சுவிட்சர்லாந்தில் இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொண்ட பின்னரும் 129 பேர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்கானதாக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் மே 14 முடிய மொத்தம் 1.2…
சுவிஸ் செய்திகள் இன்று,Swiss Tamil News,சுவிற்சர்லாந்து செய்திகள்,சுவிஸ் செய்திகள்

சுவிஸ் செய்திகள் இன்று 🔴 சுவிற்சர்லாந்து செய்திகள் தொகுப்பு ( Swiss Tamil News )

Posted by - March 18, 2021 0
சுவிஸ் செய்திகள் இன்று 🔴 சுவிற்சர்லாந்து செய்திகள் தொகுப்பு ( Swiss Tamil News ) சுவிற்சர்லாந்து செய்திகளை தமிழ் மொழியில் தமிழர்களுக்காக வழங்கி கொண்டிருக்கிறோம். சுவிற்சர்லாந்து…
பாய்ந்து வந்த ரயில்

பாய்ந்து வந்த ரயில்… பெண்ணை சட்டென்று தள்ளிவிட்ட நபர்: சுவிஸில் பகீர் கிளப்பிய சம்பவம்

Posted by - May 9, 2021 0
சூரிச் பிரதான ரயில் நிலையத்தில் பாய்ந்து வந்த ரயிலுக்கு முன்பு பெண் ஒருவரை இளைஞர் தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் துரிதமாக செயல்பட்ட…
21 6098248a88a9c

சுவிற்சர்லாந்தில் சிறப்பாக இடம்பெற்ற 2021ம் ஆண்டிற்கான தமிழ்மொழி பொதுத்தேர்வு

Posted by - May 12, 2021 0
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 27 ஆவது பொதுத்தேர்வு இன்று நடைபெற்றுள்ளது. குறித்த பொதுத்தேர்வு நாடு தழுவிய ரீதியில் 63 தேர்வு நிலையங்களில்…