Swiss Tourism Happiness Index

ஆஸ்திரியாவின் முடக்கம் சுவிஸ் சுற்றுலாத்துறையில் சாதக நிலை

6 0

ஆஸ்திரியாவின் முடக்கம் சுவிஸ் சுற்றுலாத்துறையில் சாதக நிலை- சுற்றுலாப் பயணிகள், சுவிட்சர்லாந்தின் ஸ்கை ரிசோர்ட்கள் நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

ஆஸ்திரியாவில் முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளதன் காரணமாக பெரும் அளவிலான சுற்றுலாப் பயணிகள் சுவிட்சர்லாந்து நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த ஆண்டில் சுவிட்சர்லாந்தில் ஸ்கை ரிசோர்ட்களுக்கான பதிவுகள் முன்னொரு போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.

இந்த குளிர்காலத்தில் சுவிஸ் ஸ்கை ரிசோர்ட்களுக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்க்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

WhatsApp Image 2021 11 24 at 3.09.50 AM

ஆஸ்திரியாவில் கோவிட் பெருந்தொற்று காரணமாக முடக்க நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளமை, சுவிஸ் ஸ்கை ரிசோர்ட்களில் கூடுதல் எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் பதிவு செய்வதற்கான முக்கிய ஏதுக்களில் ஒன்றாக காணப்படுகின்றது.

கடந்த ஆண்டை விடவும் மிக அதிக எண்ணிக்கையிலான பதிவுகள் கிடைக்கப் பெறுவதாக எதிர்வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கை மேலும் கூடும் என எதிர்பார்ப்பதாகவும் Tourismus Adelboden-Lenk-Kandersteg நிறுவனத்தின் Silvia Nüesch தெரிவிக்கின்றார்.

கடந்த பருவ காலத்தை விடவும் இந்த ஆண்டில் பதிவுகள் ஆரோக்கியமான முறையில் காணப்படுவதாக Wengen Tourism நிறுவனத்தின் Rolf Wegmüller தெரிவிக்கின்றார்.

எங்கிள்பர்க் டைடில் பகுதியில் கிட்டத்தட்ட மொத்த ரிசோர்ட்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என பிராந்தியத்தின் சுற்றுலாத்துறை பணிப்பாளர் Andres Lietha தெரிவித்துள்ளார்.

ஸாஸ் ப்ரீ மற்றும் ஸாஸ் வெலி ஆகிய ஸ்கை ரிசோர்ட் பகுதிகளிலும் பதிவுகள் திருப்தி அடையும் வகையில் காணப்படுவதாக Mattia Storni தெரிவிக்கின்றார்.

இவ்வாறு சுவிட்சர்லாந்தின் அநேகமான பகுதிகளில் காணப்படும் ஸ்கை ரிசோர்ட்களில் முன்பதிவுகள் ஆரோக்கியமாக காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.

Related Post

பாய்ந்து வந்த ரயில்

பாய்ந்து வந்த ரயில்… பெண்ணை சட்டென்று தள்ளிவிட்ட நபர்: சுவிஸில் பகீர் கிளப்பிய சம்பவம்

Posted by - May 9, 2021 0
சூரிச் பிரதான ரயில் நிலையத்தில் பாய்ந்து வந்த ரயிலுக்கு முன்பு பெண் ஒருவரை இளைஞர் தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் துரிதமாக செயல்பட்ட…
சுவிஸில், பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு அனுமதி

சுவிட்சர்லாந்தில் பூஸ்டர் தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு அனுமதி

Posted by - November 24, 2021 0
சுவிட்சர்லாந்தில் பூஸ்டர் தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பைசர் பயோடெக் கோவிட் தடுப்பூசியை பூஸ்டர் அல்லது மூன்றாம் மருந்தளவு தடுப்பூசியாக ஏற்றுவதற்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…
winterthurerin-nach-unfall-doch-schwerer-verletzt

வின்டத்தூர் (Winterthur) பகுதியில் ஏற்பட்ட விபத்தில் வயோதிப பெண் பலத்த காயம்

Posted by - March 22, 2021 0
வின்டத்தூர் (Winterthur) பகுதியில் ஏற்பட்ட விபத்தில் வளோதிப பெண் பலத்த காயம் – வின்டர்தூர்-டோஸில் (Winterthur-Töss) வெள்ளிக்கிழமை காலை ஒரு டெலிவரி டிரக் மற்றும் ஒரு பாதசாரி…
சுவிஸ் செய்திகள் இன்று,Swiss Tamil News,சுவிற்சர்லாந்து செய்திகள்,சுவிஸ் செய்திகள்

சுவிஸ் செய்திகள் இன்று – சுவிற்சர்லாந்து செய்திகள் (22.03.21) – Swiss Tamil News

Posted by - March 22, 2021 0
சுவிஸ் செய்திகள் இன்று – சுவிற்சர்லாந்து செய்திகள் (22.03.21) – Swiss Tamil News , சுவிற்சர்லாந்து செய்திகளை தமிழ் மொழியில் தமிழர்களுக்காக வழங்கி கொண்டிருக்கிறோம். சுவிற்சர்லாந்து…
Starkenbach இல் திடீரென வெடித்து சிதறிய வீடு

Starkenbach இல் திடீரென வெடித்து சிதறிய வீடு – உள்ளே இருந்த 50 வயது நபருக்கு நடந்த விபரீதம்.!!

Posted by - April 21, 2021 0
Starkenbach இல் திடீரென வெடித்து சிதறிய வீடு – உள்ளே இருந்த 50 வயது நபருக்கு நடந்த விபரீதம்.!! ஞாயிற்றுக்கிழமை காலை, Starkenbach, Toggenburg பகுதியில் வயோதிபர்…