சுவிட்சர்லாந்தில் குடியுரிமை

உலகிலேயே சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெறுவதுதான் மிகவும் கடினம் -ஏன் தெரியுமா..??

8 0

உலகிலேயே சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெறுவதுதான் மிகவும் கடினம் என்று கூறியுள்ளது சுவிஸ் புகலிடம் கோருவோர் மற்றும் வெளிநாட்டவர்களுக்கான சட்டங்களின் கண்காணிப்பு அமைப்பு (Swiss Observatory for Asylum and Foreigners Law).

உலகிலேயே, சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெறுவதற்குத்தான் மிகவும் கடினமான நடைமுறை பின்பற்றப்படுகிறது. 2018ஆம் ஆண்டு, அந்த நடைமுறையை மேலும் கடினமாக்கியது சுவிட்சர்லாந்து. அதன்படி, குடியுரிமை கோரி விண்ணப்பிப்போர், சுவிஸ் நிரந்தர வாழிட அனுமதி (C residence permit) வைத்திருப்பதுடன், தாங்கள் சுவிஸ் மக்களுடன் ஒருங்கிணைந்து வாழ்வதை நிரூபிக்கவேண்டும், மேலும், மொழித்தேர்வு ஒன்றையும் அவர்கள் எழுதவேண்டும்.

[ad id=”1128″]

சுவிஸ் புகலிடம் கோருவோர் மற்றும் வெளிநாட்டவர்களுக்கான சட்டங்களின் கண்காணிப்பு அமைப்பு, செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இப்படிப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள், மக்களில் ஒரு பெரிய கூட்டத்தார், அவர்கள் சுவிட்சர்லாந்திலேயே பிறந்துள்ள அல்லது வளர்ந்த நிலையிலும், குடியரசில் பங்கேற்பதிலிருந்து அவர்களை தடுப்பதாக தெரிவித்துள்ளது.

swiss passport 1920x1080 1

சுவிட்சர்லாந்தில் வாழ்வோரில் கிட்டத்தட்ட கால்வாசிப்பேரிடம் இன்னமும் சுவிஸ் பாஸ்போர்ட் இல்லை. அத்துடன், குடியுரிமை பெறுவோர் வீதமும் சுமார் 2 சதவிகிதமாகவே உள்ளது என்கிறது அந்த அமைப்பு.

’சுவிட்சர்லாந்தில் இன்னமும் சில உள்ளூர் சட்டமன்றங்களில் குடியுரிமை வழங்குவது தொடர்பாக வாக்கெடுப்புகள் நடக்கின்றன. அதுபோக, குடியுரிமை பெறுவதற்கான நடைமுறை மிகவும் சிக்கலான ஒன்றாகவும், நீண்ட காலம் பிடிப்பதாகவும் உள்ளது. அத்துடன், அதற்கான செலவும் அதிகம்’ என்கிறார் சுவிஸ் புகலிடம் கோருவோர் மற்றும் வெளிநாட்டவர்களுக்கான சட்டங்களின் கண்காணிப்பு அமைப்பின் இயக்குநரான Noémi Weber.

மாகாண புலம்பெயர்தல் செயலகத்தின் புள்ளிவிவரங்களின்படி, சுவிஸ் குடியுரிமை பெற்றவர்களின் எண்ணிக்கை சுவிஸ் குடியுரிமை சட்டம் அமுல்படுத்தப்பட்ட பிறகு குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைந்துள்ளது. 2018இல் அந்த சட்டம் வந்த நிலையில், சுவிஸ் குடியுரிமை பெற்றவர்களின் எண்ணிக்கை அப்போது 44,100 ஆக இருந்தது. அதுவே, 2021இல் 25,600 ஆக குறைந்துவிட்டது.

76178b5ee69b57c07c72f22df33cfcc85b712f3011bf877e0a12a844a1dd0b4d

ஒரு போக்குவரத்து மீறல், அல்லது பாரம்பரிய சுவிஸ் இசைக்கருவியான Alphorn என்னும் இசைக்கருவியின் பெயரை சரியாக கணிக்காதது ஆகிய விடயங்களுக்காகக் கூட சுவிஸ் குடியுரிமை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

உள்ளூர் மக்களுடன் ஒருங்கிணைந்து வாழ்வது என்றால் என்ன என்பதற்கான சரியான புரிதல், மாகாணத்துக்கு மாகாணம், நகராட்சிக்கு நகராட்சி மாறுபடுகிறது என்கிறார், பேசல் பல்கலைக்கழக சட்டத்துறை நிபுணரான Barbara von Rütte.

READ ALSO THIS :- சுவிட்சர்லாந்தில் குடியுரிமை கோருவதற்கான தேர்வில் கேட்கப்படும் சில வித்தியாசமான கேள்விகள்

எனவே, இரண்டாம் தலைமுறை சுவிஸ் மக்கள் குடியுரிமை பெறுவதை எளிமையாக்குதல், சுவிட்சர்லாந்தில் பிறப்பவர்களுக்கு குடியுரிமை வழங்குதல் முதலான பல பரிந்துரைகளை சுவிஸ் புகலிடம் கோருவோர் மற்றும் வெளிநாட்டவர்களுக்கான சட்டங்களின் கண்காணிப்பு அமைப்பு முன்வைத்துள்ளது.

குடியுரிமை வழங்குவதற்கான நேர்காணல்களை நடத்துவதற்காக சிறப்பு அமைப்புகளை உருவாக்கவேண்டும் என்றும், குடியுரிமை வழங்குவது தொடர்பாக உள்ளூர் சட்டமன்றங்கள் வாக்கெடுப்பு நடத்துவதை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்றும் அந்த அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

Related Post

சென்காலன் மாநிலத்தில் 100 பேருக்கு தண்டப்பணம் விதித்த போலீசார்

Posted by - March 13, 2021 0
சென்காலன் மாநிலத்தில் தடைகளை மீறி, நேற்று நடைபெற்ற பார்டி நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட சுமார் 100 பேருக்கு செங்காலன் காவல்துறையின் குற்றப்பணம் அறவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Deutsch மொழி கற்கலாம்

இலவசமாக Deutsch மொழி கற்கலாம் வாங்க – பகுதி 01 – SwissTamil24.Com

Posted by - March 22, 2021 0
இலவசமாக Deutsch மொழி கற்கலாம் வாங்க – பகுதி 01 – SwissTamil24.Com – சுவிற்சர்லாந்தில் பன்னெடு காலமாக இருக்கின்ற பல தமிழர்கள் இன்னும் Deutsch மொழி…
21 6194fcf87b8a2

சூரிச் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட பெண் பயணி: சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி

Posted by - November 17, 2021 0
சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தில் 73 வயதான பெண்மணி ஒருவரிடம் இருந்து கிலோ கணக்கில் கோகோயின் போதை மருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. சூரிச் விமான நிலையத்தில் திங்கட்கிழமை குறித்த…
swiss resturant, swiss hotel, swiss news in tamil

சுவிற்சர்லாந்தில் உணவங்கள் எப்போது திறக்கப்படும் – வெளியான அறிவிப்பு.!

Posted by - March 12, 2021 0
சுவிற்சர்லாந்தில் அதிகரித்த கொரோனா காரணமாக கடந்த டிசம்பர் 22 திகதி முதல் உணவு விடுதிகள் உணவகங்கள் இழுத்து மூடப்பட்டு லாக் டவுண் அறிவிக்கப்பட்டது.