ஆர்காவ் மாகாணம் Brugg பகுதியில் திங்கட்கிழமை பிற்பகல் மிகவும் குடிபோதையில் இருந்த ஒரு வாகன ஓட்டி இன்னுமொரு கார் மீது பின்புறம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து பிப்ரவரி 20, 2023 திங்கட்கிழமை மதியம் 2:50 மணியளவில் Brugg உள்ள Zurzacherstrasse இல் இடம்பெற்றுள்ளது.
32 வயதான அவர் VW போலோவில் Lauffohr நோக்கி பயணித்துக்கொண்டிருந்தார். Langmattstrasse அருகே போக்குவரத்து ஏற்பட்டிருக்கிறது என்பதை அறியாமல் எதிரே வந்த AUDI யின் பின்புறம் பயங்கரமாக மோதியுள்ளார்.
26 வயதான Audi ஓட்டுநர் கடுமையான தலைவலி மற்றும் கழுத்து வலி இருப்பதாக புகார் செய்ததை அடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அவர் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
விபத்தை ஏற்படுத்திய நபர் மிகவும் குடிபோதையில் இருந்ததை ஆர்காவ் கன்டன் போலீசார் கண்டுபிடித்தனர். உடனடியாக அவரது ஓட்டுநர் உரிமத்தை போலீசார் பறிமுதல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.