St.Gallen பகுதியில் Kiosk கடையில் திருடமுற்பட்ட இளைஞர்கள் கைது வெள்ளிக்கிழமை (08/25/2023), மதியம் 1:20 மணிக்குப் பிறகு, St.Gallen நகர காவல்துறையின் அவசர அழைப்பு மையத்திற்கு கிடைத்த அவசர அழைப்பினை அடுத்து இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டள்ளனர்.
குறித்து இரு இளைஞர்களும் அங்குள்ள Kiosk கடையில் திருட முற்பட்ட வேளையிலையே இவ்வாறு கைது செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
St.Gallen நகர காவல்துறையினரின் ரோந்துப் பிரிவினர் மேற்படி கைதினை மேற்கொண்டிருந்தனர். கைது செய்யப்பட்ட 16 வயது நிரம்பிய இரு இளைஞர்களும் சென்ட்காலன் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் சுவிஸ் நாட்டைச்சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. ஒருவரை சம்பவ இடத்தில் கைது செய்த போதும் மற்றொரு வாலிபர் தப்பியோட முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.
Quelle: Kantonspolizei St.Gallen
Titelbild: Symbolbild © Kantonspolizei St.Gallen