Image default
Swiss headline News

சுவிஸ் ஹோட்டல் நீச்சல் தடாகத்தில் குளித்த பெண்ணுக்கு ஏற்பட்ட அவமானம்.!!

சுவிஸ் ஹோட்டல் நீச்சல் தடாகத்தில் குளித்த பெண்ணுக்கு ஏற்பட்ட அவமானம்.!! கனேடிய பெண் ஒருவர் சுவிட்சர்லாந்தில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நிலையில், அவர் அந்த ஹொட்டலிலுள்ள நீச்சல் குளத்தை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நீச்சல் குளத்தை பயன்படுத்த அனுமதி மறுப்பு

ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் நிபுணரும், தொண்டு நிறுவனம் ஒன்றின் ஊழியருமான கனேடிய பெண் ஒருவர், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்திருக்கிறார்.

சுவிஸ்

அப்போது, ஹோட்டலிலுள்ள நீச்சல் குளத்துக்குச் சென்றுள்ளார் அவர். அவர் தண்ணீரில் இறங்க முற்படும்போது, பாதுகாவலர் ஒருவர் அவரை அங்கிருந்து வெளியேறச் சொல்லியியிருக்கிறார்.

அது குறித்து அவர் மேலாளர் ஒருவரிடம் புகார் கூற, அவரும் அந்தப் பெண்ணை வெளியேறச் சொல்லியிருக்கிறார்.

காரணம் என்ன?

அந்தப் பெண்ணை அவர்கள் வெளியேறச் சொன்னதற்கு, அவர் பர்க்கினி என்னும் முழு உடலையும் மறைக்கும் நீச்சல் உடை அணிந்திருந்ததுதான் காரணம் என்கிறார் அவர்.

ஆனால், ஜெனீவாவில் பர்க்கினி அணிய சட்டப்படி அனுமதி உள்ளது. தான் என்ன உடையை அணிவது என்பதை ஆண்கள் இருவர் தீர்மானிக்கும் ஒரு நிலை தனக்கு ஏற்பட்டதாக புகார் தெரிவித்துள்ள அந்தப் பெண், இது காலனி ஆதிக்க பாலினவாதம் என்கிறார்.

இந்த விரும்பத்தகாத சம்பவம் தொடர்பாக சரியான எந்த பதிலும் கிடைக்கவில்லை அவருக்கு. ஆகவே, நீ என்ன என்னை நீச்சல் குளத்திலிருந்து வெளியேறச் சொல்வது? நான் உன் ஹொட்டலை விட்டே வெளியேறுகிறேன் என்று, அந்த ஹொட்டலையே காலி செய்துவிட்டு வேறொரு ஹொட்டலுக்குச் சென்றுவிட்டார் அந்தப் பெண்.

Advertisements

Related posts

நாடாளுமன்ற முடிவை மீறி சுவிஸ் நீதிமன்றம் செய்த அதிரடி நடவடிக்கை..!!

admin

சுவிட்சர்லாந்தில் ஊசியோ வலியோ இல்லாத ஒரு கொரோனா தடுப்பூசி முறை.!!

admin

சுவிஸ் மக்கள் அதிகளவு ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.!!

admin