Schaffhausen ஷாஃப்ஹவுசென் ரயில் நிலையத்தில் ஒரு இளைஞனின் இ-ஸ்கூட்டரை திருடிச்சென்றவரை ஷாஃப்ஹவுசென் போலீசார் தேடி வருவதாக அறிவித்துள்ளார்கள். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது :-
திங்கட்கிழமை மாலை 6 மணியளிவில் 20 வயது இளைஞன் ஒருவர் தனது இ-ஸ்கூட்டரில் பயணித்து ரயில் நிலையத்தில் தரித்து நின்றவேளை இனந்தெரியாத ஒருவர் உங்களது இ-ஸ்கூட்டரை ஓட்டிப்பார்க்கலாமா என கேட்டுள்ளார்.
அதற்கு அந்த இளைஞனும் சம்மதிக்க குறித்த நபர் இளைஞனின் இ-ஸ்கூட்டரை ஓட்டிச்சென்றதாக சொல்லப்படுகிறது. நேரமாகியும் குறித்த நபர் திரும்பி வராததால் இளைஞன் போலீசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும் உங்கள் பிரதேசங்களிலும் இடம்பெறும் நிகழ்வுகள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் தமிழில் படிக்க எமது இணையத்தளத்தை தினமும் பார்வையிடுங்கள்.