Swiss Local Newsschaffhausen

Schaffhausen இல் ஏற்பட்ட விபத்தில் குடைசாய்ந்த கார் – பெண் தப்பி ஓட்டம்.!

Schaffhausen இல் ஏற்பட்ட விபத்தில் குடைசாய்ந்த கார் – பெண் தப்பி ஓட்டம்.! வியாழன் மதியம் (02.02.2023) மதியம் 1 மணியளவில் 26 வயதுடைய நபர் ஒருவர் Schaffhausen , Widlenstrasse லிருந்து வலதுபுறம் Büsingerstrasse க்கு ஒரு காரை ஓட்டிச் சென்றபோது கார் குடைசாய்ந்து விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அதே நேரத்தில், அடையாளம் தெரியாத பெண் ஒரு சிவப்பு நிற காரில் Schaffhausen, Büsingerstrasse இல் சென்று கொண்டிருந்தார். ஓட்டுநரின் கூற்றுப்படி, அந்தப் பெண் காரில் வரும் போது  சத்தமிட்டார், சத்தமிட்டுக்கொண்டு வந்ததாகவும்.. அதனால் குறித்த பெண்ணையும் அவர் பயணித்தை காரையும் திரும்பி பார்க்கின்ற போது திடீரென கார் விபத்துக்குள்ளாகி குடைசாந்தாகவும் குறிப்பிட்டார்.

Schaffhausen, குடைசாய்ந்த கார்,பெண் தப்பி ஓட்டம், swisstamilnews

அந்த ஆணின் கூற்றுப்படி, விபத்துக்குள்ளானவரின் கூற்றுப்படி குறித்த பின்னர் விபத்துக்கு பின்னர் சிறிது நேரம் அந்த இடத்தில் நின்று தன்னுடன் வாக்குவாதப்பட்டதாகவும். விபத்துக்கு நான் காரணம் இல்லை என அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

எனினும் விபத்து ஏற்பட்டமைக்கு அந்த பெண்தான் காரணம் என்பதை போலீசாரிடம் விபத்தில் சிக்கிய நபர் வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த போக்குவரத்து விபத்தில் டிரைவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இருப்பினும், அவரது கார் சிறிய சேதங்களுக்கு உள்ளாகியிருந்தது.

Büsingerstrasse இன் பாதிக்கப்பட்ட பகுதி Schaffhausen போலீசாரால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு குறித்த சிவப்பு காரில் பயணித்த பெண் தொடர்பாகவும் விசாரித்தார்கள். கவிழ்ந்த காரை காப்புறுதி கம்பனி அகற்றி செல்வதற்கும் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விபத்து நடந்த இடத்தை வழமைக்கு கொண்டுவருதற்கும் குறித்த வீதி 1 மணி நேரம் மூடப்பட்டிருந்மை குறிப்பிடத்தக்கது.

விபத்துக்கு காரணமாக கருதப்படும் சிவப்பு நிற காரில் தப்பித்து சென்ற பெண் தொடர்பாக தகவல்கள் தெரிந்தால் (தொலைபேசி எண் +41 52 624 24 24) என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளும்படியும் Schaffhausen  போலீசார் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.

Related Articles

Back to top button