Obwalden மாநிலத்தில் பாதசாரி கடவையை கடக்க முயன்ற ஒருவர் மீது கார் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் பாதசாரிக்கு கடுமையான காயத்துக்கு உள்ளாகி வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:-
நேற்று மாலை (12/1/23) , மாலை சுமார் 5:15 மணியளவில், Brünigstrasse இல் உள்ளGiswil லில் இருந்து Sarnen திசையில் ஒரு ஓட்டுநர் ஓட்டிக்கொண்டிருந்தார். Dorfstrasse / Brünigstrasse சந்திப்பில் போக்குவரத்து நெரிசலில் கவனம் செலுத்திய 50 வயதான ஓட்டுனர், Seestrasse இல் பாதசாரி கடவையில் வந்த ஒருவரைப் பார்க்கத் தவறிவிட்டார்.
இதனால், பாதசாரியும், காரும் மோதி விபத்துக்குள்ளானது. பாதசாரி சுமார் ஆறு மீட்டர் முன்னோக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் 51 வயதான பாதசாரி பலத்த காயமடைந்துள்ளார். வாகனத்தின் பொருள் சேதம் பல ஆயிரம் பிராங்குகள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விபத்து சம்பவத்தின் போது Obwalden ல் உள்ள கன்டோனல் காவல்துறை, Sarnen மற்றும் standen ல் உள்ள கன்டோனல் மருத்துவமனைகளின் அவசர சேவைகள் பயன்படுத்தப்பட்டன.
குறிப்பாக பார்வைத்திறன் குறைவாக இருக்கும் பாதசாரிகள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் போலீசாரினால் கேட்கப்பட்டுள்ளதோடு முக்கியமாக மாலை மற்றும் இரவில், பிரகாசமாக அல்லது பிரதிபலிக்கும் ஆடைகள் விபத்துகளைத் தவிர்க்க உதவுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.