பேர்ன் நகரில் உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்து.! பேர்ன் நகரின் Altstadt இல் உள்ள உணவகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஃபயர் அலாரம் சிஸ்டத்தால் , தீயணைப்புப் படை அவசர அழைப்பு மையம் FNZ 118க்கு அதிகாலை 1:50 மணிக்கு எச்சரிக்கப்பட்டது.
இதனையடுத்து தொழில்முறை தீயணைப்புப் படை தீயணைப்பு இயந்திரத்துடன் Postgasse க்குச் சென்றுள்ளார்கள். அந்நேரத்தில் உணவகத்தின் தரை தளத்தில் உள்ள ஒரு சிறிய அறையில் தீ பரவியது. உடனடியாக தீயணைப்பு வாகனம் மூலம் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அணைக்கப்பட்டது.
குறித்த சம்பவத்தின் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சேதத்தின் அளவு மற்றும் தீ விபத்துக்கான காரணம் பெர்ன் கன்டோனல் காவல்துறையின் தீயணைப்பு துறையால் மதிப்பிடப்பட இருப்பதாக குறிப்பிடப்பட்டள்ளது.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.