Rapperswil-Jona SG பகுதியில் கத்தி முனையில் மிரட்டி பணம் மற்றும் மேலும் பல பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருதாவது:-
செவ்வாய்கிழமை (01/17/2023), இரவு 11 மணிக்குப் பிறகு, Schlüsselstrasse வீதியில் இக்கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குற்றவாளி 16 வயது மொராக்கோவைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
20 வயது மதிக்கத்தக்க இருவரை அடையாளம் தெரியாத இந்த இளைஞன் தடுத்து நிறுத்தியுள்ளான். கதன்னிடம் இருந்த கத்தியினை காட்டி மிரட்டி இரண்டு இளைஞர்களையும் சோதனையிட்டுள்ளான்.
அவர்களது ஆடைகளை சோதனையிட்ட குற்றவாளி, பணம், தொலைபேசிகள் மற்றும் ஹெட்ஃபோன்கள் மற்றும் ஜாக்கெட்டையும் திருடிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
போலீசாருக்கு தகவல் வழங்கப்படவே குறித்த குற்றவாளியான மொராக்கோ நாட்டு இளைஞனை சூரிச் பகுதியில் சூரிச் மாகாண காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு St.Gallen கன்டோனல் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட போது, திருடப்பட்ட பொருட்கள் மற்றும் பிற சந்தேகத்திற்குரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.