SwissTamil24.Com
Swiss headline News

நடுவானில் தரையிறங்க முடியாமல் தவித்த சுவிஸ் விமானம்

நடுவானில் தரையிறங்க முடியாமல் தவித்த சுவிஸ் விமானம் கடந்த வாரம் சுவிட்சர்லாந்திலிருந்து ஜேர்மனி புறப்பட்ட சுவிஸ் விமானம் ஒன்று, ஜேர்மனியில் தரையிறங்க முடியாததால், மீண்டும் சுவிட்சர்லாந்துக்கே திரும்பிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

சுவிட்சர்லாந்திலிருந்து ஜேர்மனிக்கு…

கடந்த வியாழக்கிழமை, சுவிட்சர்லாந்தில் சூரிச்சிலிருந்து ஜேர்மனியிலுள்ள Düsseldorfக்கு சுவிஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று பயணித்துள்ளது.

Düsseldorf விமான நிலையத்தில் நான்கு முறை விமானத்தை தரையிறக்க முயற்சித்தும் முடியாததால், சூரிச்சுக்கே விமானத்தை திருப்பிச் செல்வதென விமானிகள் முடிவு செய்துள்ளார்கள்.

நடுவானில், தரையிறங்க முடியாமல், சுவிஸ் விமானம்

அதைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து திரும்பிய அந்த விமானம், சூரிச் விமான நிலையத்திலேயே தரையிறங்கியுள்ளது.

அதாவது, Düsseldorfக்கு அருகே கடுமையான புயல் வீசிக்கொண்டிருந்திருக்கிறது. அதனால், விமானத்தை தரையிறக்குவது விமானிகளுக்கு பெரும் சவாலாக இருந்துள்ளது.

இந்த விடயம் குறித்து விளக்கமளித்துள்ள செய்தித்தொடர்பாளர் ஒருவர், பலத்த காற்று காரணமாக விமானத்தை தரையிறக்க முடியாததால், சூரிச்சுக்கே விமானத்தை திருப்பிச் செல்வது என விமானிகள் முடிவு செய்துள்ளனர் என்றார்.

அதுமட்டுமின்றி, Düsseldorf விமான நிலையத்துக்கு வந்த 14 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டதாகவும், மூன்று விமானங்களின் புறப்பாடு ஒத்திவைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மோசமான வானிலை காரணமாக, விமானம் புறப்படுவது ஆபத்தானது என்பதால், 10 விமானங்கள் வியாழனன்று ரத்து செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

(source:- Lankasri)

all image 1600x603 1

Related posts

சுவிட்சர்லாந்தில் வாழும் ரஷ்யர்களின் ஆதரவு யாருக்கு? வாக்கெடுப்பு முடிவுகள்

admin

சுவிட்சர்லாந்தில் ஒரு விநோத பார்சல் மோசடி: அமைச்சர் தெரிவித்துள்ள தீர்வு

admin

வெளிநாட்டில் வாழும் சுவிஸ் நாட்டவர் மீது பெண் மருத்துவர் குற்றச்சாட்டு

admin

சுவிட்சர்லாந்து செய்திகள் (18/12/2023) – Swiss Tamil News Today

admin

சுவிட்சர்லாந்தில் புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

admin

AECOM proposes revamp of Los Angeles riverfront downtown

admin

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More