சூரிச்சிலுள்ள எஃப்ரெடிகோனில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி
கன்டோன் சூரிச்சிலுள்ள எஃப்ரெடிகோனில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
இன்று திங்கட்கிழமை காலை 7 மணியளவில் கார் ஒன்று குடைசாய்ந்து பள்ளத்தில் வீழ்ந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து வந்த மீட்புப் பணியாளர்கள் வாகனத்தில் உயிரற்ற ஒருவரைக் கண்டனர்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, கார் Pfäffikonerstrasse இல் இருந்து Kemthhal ரயில் நிலையத்தை நோக்கிச் சென்றுள்ளது.. சற்று வலது பக்கம் வளைவில், வாகனம் மோதுண்டு சாலையின் புதர்களை தாண்டி கவிழ்ந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்து ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணி முதல் 8 மணி வரை நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர். குறித்த விபத்தில் பலியானவர் 37 வயதான நபர் என தெரியவந்துள்ளது.
விபத்து காரணமாக, Pfäffikonerstrasse பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள அனைத்து போக்குவரத்திற்கும் சுமார் நான்கரை மணி நேரம் மூடப்பட்டு தீயணைப்பு துறையினரால் மாற்றுப்பாதை அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
News & Image (c) Kantonspolizei Zürich