Image default
Swiss Local NewsZurich

Newcastle தொற்று… சுவிட்சர்லாந்தில் வியாபிக்கும் மர்ம வியாதி

Newcastle தொற்று… சுவிட்சர்லாந்தில் வியாபிக்கும் மர்ம வியாதி

சூரிச் மாநிலத்தில் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள Newcastle தொற்று தொடர்பில் மர்மம் நீடித்து வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.

சூரிச் மாநிலத்தின் Niederglatt பகுதியில் அமைந்துள்ள ஒரு கோழிப்பண்ணையில் ஜனவரி இறுதியில் Newcastle தொற்று அடையாளம் காணப்பட்டது.

குறித்த மிகவும் ஆபத்தான இந்த தொற்று என்பது பறவைகள் இனி முட்டையிட முடியாது என்பதாகும். மட்டுமின்றி, பறவைகள், விலங்குகளை பாதிக்கும் இந்த தொற்றானது மனிதர்களுக்கும் ஆபத்தானது என நிபுணர்களால் எச்சரிக்கப்பட்டுள்ளது.

new.zurich

ஆனால் குறித்த தொற்றானது எவ்வாறு பண்ணைகளில் பரவியது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இருப்பினும் சூரிச் பல்கலைக்கழக நிபுணர்கள் தரப்பு முன்னெடுத்துள்ள ஆய்வில், காட்டுப்பறவைகளில் இருந்தே குறித்த மர்ம நோய் பண்ணைகளில் பரவியிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட பறவைகளை கொல்லும் நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது. மட்டுமின்றி குறிப்பிட்ட பண்ணைகளில் இருந்து விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட பண்ணையைச் சுற்றி பல கிலோமீற்றர் தொலைவுக்கு அதிகாரிகள் பாதுகாப்பு வலயம் அமைத்துள்ளனர். 2011 மற்றும் 2017 க்கு இடையில் சுவிட்சர்லாந்தில் நியூகேஸில் நோய் பல பண்ணைகளில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன.

மேலும், வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட பறவைகளாலையே ஜெனீவா பகுதிகளில் Newcastle தொற்று பரவியதாக கண்டறியப்பட்டது.

Advertisements

Related posts

டெலிவரி வேன் – மோட்டார் சைக்கிள் விபத்து.! Solothurn மாகாணத்தில் சம்பவம்.!!

admin

Appenzeller Bahnen இல் இருந்து வந்த ஒரு ரயில் காருடன் மோதி விபத்து.!!

admin

A18 Reinach BL – சுரங்கப்பாதை சுவரில் மோதி BMW கார் விபத்து

admin

Leave a Comment