அருந்தவராஜா எழுதிய புலம் பெயர்ந்த “தமிழர்கள் வலியும் வரலாறும்” நூல் அறிமுக விழா
ஜெனீவா க . அருந்தவராஜா எழுதிய புலம் பெயர்ந்த தமிழர்கள் வலியும் வரலாறும் என்ற நூலின் அறிமுக விழா
எதிர்வரும் 17.02. 2024 சுவிஸ் தலைநகரில் அமைந்துள்ள சிவன் கோவிலில் நடைபெறவிருக்கின்றது . கலாநிதி கல்லாறு சதீஸ் அவர்களின் தலைமையில் இடம் பெறும் நூல் அறிமுக நிகழ்வில் சீனப் பெண்மணியான Zhang Qi ஜாங்சீ (நிறைமதி) ” புலம் பெயர்ந்த தமிழர் வலியும் வரலாறும் ” நூல் பற்றியும் சீனருக்கும் தமிழருக்கும் உள்ள வரலாற்றுத் தொடர்புகள் (கலை , கலாசாரம் ,பண்பாடு) தொடர்பாகவும் தமிழில் உரையாற்றவிருக்கின்றார்.
இவர் சீனத் தமிழ் வானொலியின் சர்வதேச ஒலிபரப்பாளராக பணியாற்றியுள்ளதோடு தற்போது சீன யூனான் மின்சு பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.
சீன தகவல்தொடர்பு பல்கலைக்கழகத்தில் தமிழில் இளங்கலைப் பட்டத்தையும் கொங்கொங்கில் உள்ள சீன சர்வதேசப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் ,பொருளாதாரத் துறையில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
தற்போது சீனப் பல்கலைக்கழகத்தில் தொடர்பாடல் துறையில் ஆராய்ச்சிப் பட்டயக் கல்வியை (PhD) மேற்கொண்டு வருகிறார்.
தமிழ் மீது அதிக விருப்புடைய இவர் சீனாவில் தமிழ் மொழியின் சிறப்பைப் பரப்பும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளார்.
இவர் எழுதிய தமிழ் நூல்கள்.
(1)அடிப்படைத் தமிழ் (தமிழ் , சீன மொழியில்)
(2) மலைகள் தாண்டி மதுரைப் பயணத்தில் சீனப் பெண்ணின் பண்பாட்டுத் தேடல் .
(3) கொடுக்கும் கலை.
* நூல் அறிமுக நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக தமிழ் மொழி வாழ்த்துப்பாடலை சுவிஸ் நாட்டில் பிறந்து டொச் / ஜேர்மன் ( ) மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களான
Gabriela Glauser
Janick knobel
Irene zeitner ஆகியோர் பாடவிருக்கின்றனர், தமிழ் மக்களோடு மிக அன்போடு பழகிவரும் இவர்கள் தமிழர்களின் கலைகளைக் கற்பதிலும் சமய பண்பாட்டு விழுமியங்களையும் ஏற்று நடப்பவர்களாகவும் உள்ளனர். இவர்கள் பேர்ன் நகரில் இயங்கி வரும் பூரண இல்லப் பக்தர்களாக ஆன்மிகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் உரைகள் , கவிதை , பாடல் , நடனம் ஆகிய நிகழ்வுகளும் இடம் பெறும். புலம் பெயர் தமிழர் தொடர்பான வரலாற்று அறிதல் ,உரையாடல் தொடர்பாக நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பங்கு கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் வருக. பயன் பெறுக..
அழைப்பில்
பேர்ன் வள்ளுவன் பள்ளி .
ஜெனீவா கலை இலக்கியப் பேரவை
யாழ் பல்கலை நண்பர்கள் 85 /86