முக்கிய செய்திகள்

KFC நிறுவனத்தை போன்று சூரிச் நகரில் கடை திறந்தவருக்கு நேர்ந்த கதி.!!

Zurich restaurant annoys fast food chain KFC,

KFC நிறுவனத்தை போன்று சூரிச் நகரில் கடை திறந்தவருக்கு நேர்ந்த கதி.!! அமெரிக்காவை தலமையாக கொண்ட உணவு நிறுவனமான முகுஊ சிக்கன் நிறுவனத்தைப்போல சூரிச் நகரில் ஃபிரைடு சிக்கன் உணவகம் ஆரம்பித்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது:

KFC (Kentucky Fried Chicken) உணவகத்தின் லோகோவும் பெயரையும் காப்பிடியத்து அதைப்போலவே சொந்தமாக ஒரு உணவகத்தை சூரிச் நகரில் ஆரம்பித்து நடத்திவந்தவருக்கே இந்த நிலமை ஏற்பட்டுள்ளது.

KFC நிறுவனத்தை,சூரிச் நகரில்,கடை
KFC நிறுவனத்தை போன்று சூரிச் நகரில் கடை திறந்தவருக்கு நேர்ந்த கதி.!!

குறித்த நிறுவனமாக ZFC என்ற துரித உணவு கடையின் உரிமையாளராக அஹ்மத் சயீத் என்பவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் பிரபல அமெரிக்க நிறுவனமாக KFC நிறுவனத்தின் லோகோ மற்றும் எழுத்துருக்கள் தங்களை போன்றே கோழி உணவு வைககளும் தங்களை போன்று விற்பனை செய்வதாகவும் இதனால் வழக்கு தொடரப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் இந்தக்குற்றச்சாட்டுகள் குறித்து முற்றாக மறுப்பு தெரிவித்த ZFC கடை உரிமையாளரான அஹ்மத் சயீத் குறிப்பிடுகையில் இது KFC க்கு எதிரான ஒன்றோ அல்லது அவர்களை போன்றோ இல்லை எனவும் தான் சுவிற்சர்லாந்து சட்டதிட்டங்களுக்கு அமைய பதிவு செய்யப்பட்டே கடை நடத்துவதாகவும் குறிப்பிட்டார்.

KFC நிறுவனத்தை, சூரிச் நகரில்,சிக்கன்

மேலும் KFC நிறுவனத்தினர் சொல்வது போன்று லோகோ மற்றும் நிறங்களில் அவர்களின் ப்ராண்ட் லோகோவில் வரும் நிறங்களோ எழுத்துக்களோ இல்லை எனவும் மறுத்துள்ளர்.

அவர்கள் சிவப்பு, வெள்ளை நிறங்களையும் தடித்த எழுத்துக்களையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் எனது நிறுவத்தில் மஞ்சள் கறுப்பு வண்ணங்களும் மெல்லிய எழுத்துக்களுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை முற்றாக மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

KFC எனப்படுகின்ற அமெரிக்காவுக்கு சொந்தமான இந்த துரித உணவு நிறுவனமானது உலகம் முழுவதும் 20,000 க்கும் மேற்பட்ட உணவகங்களைக் கொண்டிருக்கிறது. மேலும் 2016 ம் ஆண்டி இதன் நிறுவுனர் சுவிற்சர்லாந்தில் 50 கிளைகளை நிறுவபோவதாக தெரிவித்தார்.

இதனடிப்படையில் அண்மையில் சுவிசில் கால்பதித்த இந்த நிறுவனம் ஒரு சில மாகாணங்களில் தங்களது கிளையை திறந்துள்ளது. எனினும் மேலும் 41 கிளைகளை சுவிசில் திறக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்தநிலையில் அவர்களை போன்றே ஒருவர் துரித கோழி உணவுகளை விற்பனை செய்யும் நிறுவனத்தை சூரிச் (Zurich) நகரில் ஆரம்பத்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related posts