Image default
Swiss Local NewsSolothurn

Egerkingen SO : எக்ஸ்பிரஸ் சாலையில் இரண்டு கார்கள் மோதி விபத்து.!!

Egerkingen SO : எக்ஸ்பிரஸ் சாலையில் இரண்டு கார்கள் மோதி விபத்து.!! வியாழக்கிழமை காலை Egerkingen இல் உள்ள எக்ஸ்பிரஸ் சாலையில் இரண்டு கார்கள் சம்பந்தப்பட்ட போக்குவரத்து விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தின் போது இரண்டு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாட்சிகளை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில் :-

பிப்ரவரி 23, 2023, வியாழன் அன்று, காலை 7 மணியளவில், Bern திசையில் A2 மோட்டார்வே Ausfahrt ற்கு அருகில், Egerkingen இல் உள்ள எக்ஸ்பிரஸ் சாலையில் இரண்டு கார்கள் மோதின. இரண்டு டிரைவர்களும் காயமடைந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Egerkingen SO, Egerkingen, Solothurn, மோதி விபத்து

விபத்தில் சிக்கிய இரண்டு வாகனங்களும் TCS நிறுவனத்தால் இழுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால், விரைவு சாலை (AutoBhan) சிறிது நேரம் முற்றாக மூடப்பட்டதால், அப்பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Egerkingen SO, Egerkingen, Solothurn, மோதி விபத்து, சுவிஸ் தமிழ், சுவிஸ் செய்திகள் தமிழ்

விபத்துக்குள்ளான நபர்களின் வெவ்வேறு வாக்கு மூலங்களின் காரணமாக, பொலிஸார் சாட்சிகளைத் தேடி வருகின்றனர், குறிப்பாக விபத்து நடந்த போது நெடுஞ்சாலையை விட்டு வெளியேறிய மற்றும் விபத்தை அவதானித்தவர்கள் Egerkingen இல் உள்ள Solothurn கன்டன் பொலிஸாரிடம், 062 311 94 00 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தரும்படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுவிஸ், சுவிஸ் பற்றிய தகவல், தமிழ் சுவிஸ், SwissTamilNews, TamilSwiss, Lankasri, SwissInfo, சூரிச், இன்றைய சுவிஸ் செய்திகள், சுவிஸில், சுவிஸ் தமிழர், சுவிஸ் தமிழ், சுவிஸ் செய்திகள் தமிழ், சுவிஸ் மக்கள் தொகை

Advertisements

Related posts

Biel BE – 76 வயதான பெண் காணவில்லை – மக்களின் உதவியை நாடும் போலீசார்.!!

admin

டெலிவரி வேன் – மோட்டார் சைக்கிள் விபத்து.! Solothurn மாகாணத்தில் சம்பவம்.!!

admin

Basel – Hölstein பகுதியில் விபத்து – குழந்தைகள் உட்பட 5 பேர் காயம்.!!

admin