Biel BE – 76 வயதான பெண் காணவில்லை – மக்களின் உதவியை நாடும் போலீசார்.!!
புதன்கிழமை காலை முதல் Biel இல் 76 வயதான பெண் ஒருவர் காணவில்லை. உடல் நோய் காரணமாக பெண்ணுக்கு மருத்துவ உதவி தேவை என்பதால் பெர்னில் உள்ள கன்டோனல் போலீசார் மக்களிடம் உதவி கோரியுள்ளார்கள்.
புதன்கிழமை பிற்பகல் நவம்பர் 30 2022 அன்று மரியா சோலேடாட் டயஸ் லோபஸ் பீலில் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இது தொடர்பாக பெர்ன் கன்டோனல் காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
76 வயதான பெண் கடைசியாக புதன்கிழமை காலை அவர் வசிக்கும் இடத்தில் காணப்பட்டார். காணாமல் போனவர்களின் அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னர் விரிவான விசாரணைகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. எனினும் இதுரை கண்டுபிடிக்கப்படவில்லை.