சூரிச் வின்டத்தூர் நகரில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ள சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வின்டர்தூரில் வியாழக்கிழமை காலை கட்டுமாக வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் பள்ளத்தில் வீழ்ந்தமையால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
சூரிச் கன்டோன் போலீசார் அறிக்கையின் படி, அந்த நபர் வின்டர்தூர் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். 27 வயதான அவர் பாதுகாப்பற்ற பள்ளத்தில் பல மீட்டர் ஆழத்தில் தனது வேலையைச் செய்தார். அவர் வேலை செய்யும் போது, பக்க சுவர்கள் சரிந்து, மண் கொட்டியது.

இதனால் அங்கிருந்து தப்பிக்க முடியாத அந்நபர் மண்ணுக்குள் சிக்கிக்கொண்டார். விபத்தில் சிக்கி இறந்த நபர் 27 வயதான இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

மீட்பு பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக வரவழைக்கப்பட்ட போதும் குறிப்பிட்ட நபரை பிணமாகத்தான் மீட்க முடிந்ததாக போலீசார் குறிப்பிட்டார்கள. பணியிடத்தில் நடந்த விபத்து குறித்து கன்டோனல் போலீசார் மற்றும் வின்டர்தூர் ல் உள்ள அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.
Images:- @zurich kanton Police