Appenzeller Bahnen இல் இருந்து வந்த ஒரு ரயில் இன்று ஞாயிற்றுக்கிழமை Wasserauen AI இல் ஒரு லெவல் கிராசிங்கில் கார் மீது பயங்கரமாக மோதி, பின்னர் தடம் புரண்டது. காரில் இருந்த பயணிகள் மூன்று பேரும் படுகாயமடைந்துள்ளார்கள். பின்னர் விபத்தில் சிக்கியவர்களை அவசர வானூர்தியின் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்தில், 39 வயதான மற்றும் 21 வயதான பயணிகளுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன, 55 வயதான சாரதி மிதமான காயங்களுக்கு உள்ளானதாக Appenzell Innerrhoden கன்டோனல் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அறிவித்தனர். ரயில் ஓட்டுநருக்கும், ரயிலில் இருந்த பயணிகளுக்கும் காயம் ஏற்படவில்லை.
பொலிஸாரின் கூற்றுப்படி, Appenzeller Bahnen ரயில் 11:30 P.M. க்கு சற்று முன்னர் Appenzell திசையில் Wasserauen இல் இருந்து சென்று கொண்டிருந்தது. அதே நேரத்தில், 55 வயதான அவர் செயின்ட் ஆண்ட்ரூ பகுதியில் மூடப்பட்டிருந்த லெவல் கிராசிங் வழியாக தனது வாகனத்தை ஓட்டிச்சென்றபோதே விபத்து ஏற்பட்டள்ளது.
காருக்கு பெரிய அளவில் சேதம் இல்லை என்றாலும் ரயிலுக்கு சேதம் பல லட்சம் பிராங்குகள் இருக்கும் என சொல்லப்படுகிறது. இரண்டு ரேகா ஹெலிகாப்டர்கள், ஒரு ஆம்புலன்ஸ், Schwende, Rüte மற்றும் Appenzell ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்புப் படைகள், சுற்றுச்சூழலுக்கான அலுவலகத்திலிருந்து அழைப்பு சேவை, Appenzeller Bahnen இலிருந்து பல்வேறு அவசர சேவைகள் மற்றும் Appenzell Innerrhoden இலிருந்து அரசு வழக்கறிஞர் அலுவலகம் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. இந்த சம்பவம் குறித்து சுவிஸ் விபத்து விசாரணை வாரியத்திற்கு (Sust) தகவல் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.