A3 நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் விபத்து : தீப்பற்றி எரிந்த கார்
பிப்ரவரி 15, 2025, சனிக்கிழமையன்று, மதியம் 12:15 மணியளவில், (Benken) பென்கன், Chur திசையில் உள்ள A3 நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட போக்குவரத்து விபத்து ஏற்பட்டது.
ரீச்சன்பர்க் சந்திப்பிற்கு சிறிது நேரத்துக்குப் பிறகு, 33 வயதுடைய ஓட்டுநர் ஒருவர் அதிக போக்குவரத்து நெரிசலில் வேகமான முந்திச்செல்லும் பாதையில் இருந்து நிலையான பாதைக்கு மாற முயன்றார். பின்னர் அவர் அதை கைவிட்டு மீண்டும், வேகமான பாதையில் திரும்பிச் சென்றபோது, அவர் மற்ற இரண்டு வாகனங்களுடன் மோதினார்.

மோதியதில் அவரது கார் தீப்பிடித்து முற்றிலும் எரிந்தது. இதனால் சற்றுநேரத்தில் சாலையை சுற்றி கடுமையான புகை பரவ ஆரம்பித்தது. தேவையான துப்புரவுப் பணிகள் காரணமாக, கணிசமான போக்குவரத்து தாமதம் ஏற்பட்டது, இதில் நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.
Schänis தீயணைப்புத் துறையினர் விரைவாக தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கிளாரஸ், சென்ட் கேலன் மற்றும் சூரிச் கன்டோனல் காவல்துறையின் அவசர சேவைகள் சுமார் இரண்டு மணி நேரம் கன்டோனல் சாலையில் போக்குவரத்தைத் திருப்பிவிட்டன. இந்த விபத்தில் சொத்துக்கள் சேதம் அடைந்தாலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
Kantonspolizei Glarus (c)